30 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 16 மே 2018 19:17

சென்னை,

தக்கலை, குளச்சல், தூத்துக்குடி ஏ.எஸ்.பிக்களுக்கு எஸ்.பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உபகோட்டை ஏ. எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், போலீஸ்  சூப்ரெண்ட் ஆக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உபகோட்ட ஏ. எஸ்.பி. என்.எஸ். நிஷா எஸ்..பி.ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி நகர துணை கமிஷனராக ( சட்டம் ஒழுங்கு) மாற்றம் செய்யப்படுகிறார்.

குளச்சல் உபகோட்ட உதவி ஏஎஸ்.பி. சாய் சரண் தேஷாஸ்வை எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர காவல்துறையின் புளியந்தோப்பு துணைக்கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

 திருவண்ணாமலை நகர உபகோட்டம் ஏ.எஸ்.ஏபி. ராவாலி பிரியா காந்த்புன்னேனி எஸ்.பி. ஆஆக வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனராக  மாற்றம் செய்யப்படுகிறார்.

தூத்துக்குடி நகர உபகோட்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்  எஸ்.பி.ஆக பதவி பெற்று திருவல்லிக்கேணி துணைக்கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை அடையார் துணைக்கமிஷனர் ரோகித் நாதன் ராஜகோபால் மாற்றப்பட்டு சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஜார்ஜ் சேலம் போலீஸ் எஸ்.பி..யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக உள்ள பி.ராஜன் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு சென்னை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அப்பதவியில் உள்ள ஜி.ஸ்டாலின் சேலம் மண்டல அமலாக்க பிரிவு கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்பு பட்டியலில் உள்ள சம்பத் குமார் சென்னை ஆவடி வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் மூன்றாவது அணியின் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக உள்ள கண்ணம்மாள் சென்னை மத்திய சரக ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அப்பதவியில் உள்ள ஜெயலட்சுமி சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பியாக உள்ள சரோஜ் குமார் தாக்கூர் திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஆனி விஜயா சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியில் உள்ள தேவராணி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் புறநகர் எஸ்.பி. உமா திருப்பூர் மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனராக  மாற்றப்பட்டுள்ளார். தற்போது அந்த பொறுப்பில் உள்ள கயல்விழி மாற்றம் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள சக்தி கணேசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் சென்னை மாநகர (மேற்கு) போக்குவரத்துத் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர மேற்கு சரக போக்குவரத்து துணை கமிஷனராக உள்ள ஈஸ்வரன் அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் துணைக் கமிஷனர் சர்வேஸ்ராஜ் மாற்றப்பட்டு சென்னை மாநகர தலைமை அலுவலகத்தில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி வீராபுரத்தில் மூன்றாவது அணி கமாண்டண்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாவது அணியின் கமாண்ட்ண்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றல் உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட் பிறப்பித்துள்ளார்.