நேபாளத்தில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி

பதிவு செய்த நாள் : 16 மே 2018 16:48

காத்மண்டு,

   நேபாளத்தில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

நேபாள நாட்டின் சிமிகோட் பாஸ் மாகாணத்தில் உள்ள சுர்க்ஹெட் விமான தளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு காலை 6.12 மணியளவில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

மேலும், வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிச்சென்ற 2 விமானிகளும் விபத்தில் உயிரிழந்தனர் என இந்த விபத்து குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய துணை இயக்குநர் ஜெனரல் போக்ரேல் தகவல் தெரிவித்துள்ளார்.