ஆளுநர் பன்வாரிலால் பிறந்த நாள்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 17:26

சென்னை,

     தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்வாரிலாலுக்கு பூங்கொத்துடன் முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தி ஒன்றையும் அனுப்பி உள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், இந்த நன்னாளில் உங்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நீங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை புரிய இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் அமைதியையும் தர பிரார்த்திக்கிறேன் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.