மூச்சுவிடும் சமாதிகள்

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2018

அரேபிய நாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் குடியேறியவர் ஹஸ்ரத் தாவூத் ஷா. இவர் தங்கிய கிராமத்தின் பெயர் வேனாடு. ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் இணைந்திருந்த இந்த கிராமம் இப்போது ஆந்திர மாநிலத்தில் இணைந்துள்ளது.

”தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில், மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே” என்பது பாசுர சாரம். இதே உணர்வு மேலிட இந்த மண்ணைப் பிரிய மணமில்லாத அவதூதாவின் கதை இது. இந்து மத திருத்தலங்களை பதிவு செய்து வரும் தினேஷ் குகனின் அற்புதமான முயற்சி “மூச்சுவிடும் சமாதிகள்”

ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சூளூர்பேட்டை என்னும் பகுதி உள்ளது. இந்த சூளூர்பேட்டை பகுதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வளாகத்துக்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. அங்கிருந்து சற்று உள்ளே சென்றால், பழவேற்காடு ஏரியை அடையலாம். அந்த ஏரிக்கு மத்தியில் வேனாடு என்னும் கிராமம் தீவு போல் அமைந்துள்ளது. இதனை கடந்து சென்றால் இஸ்ரோவை அடையலாம்.

சூளூர்பேட்டையில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த வேனாடு கிராமம், அங்குள்ள ஹஸ்ரத் தாவூத் ஷா வாலி என்னும் தர்காவால் மிகவும் பிரபலமான கிராமமாக விளங்கி வருகிறது.

வேனாடு தர்கா

வேனாடு கிராமத்தின் மையத்தில் புகழ்வாய்ந்த தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஹஸ்ரத் தாவூத் ஷா வாலி என்னும் அவதூதாவின் சமாதி உள்ளது. அது என்ன அவதூதா என்று பலர் எண்ணுவீர்கள்? தங்கள் மத குரு தலைவர்களை அவதூதா என்று இஸ்லாமியர்கள் அழைப்பர்.

625 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டில் இருந்து 11 சீடர்களுடன் ஹஸ்ரத் தாவூத் ஷா வேனாட்டிற்கு வந்துள்ளார். இவர் தனது தங்கையான வகிதாவையும் உடன் அழைத்து வந்தார்.

இஸ்லாமியர்களுக்கு புனிதமாக கருதப்படும் இடம் மெக்கா. அரேபிய நாட்டில் உள்ள மெக்கா மண்ணின் மகத்துவத்தை வேனாடு கிராமமும் பெற்றுள்ளதாக அவர்கள் எண்ணினர். ஆகையால் அவர்கள் அந்த கிராமத்தைவிட்டு எங்கும் செல்லாமல் இருக்கவேண்டும் என்று எண்ணினர்.

ஹஸ்ரத் தாவூத் ஷா வேனாடு கிராமத்தில் உள்ள மக்களின் நோய்களை தீர்ப்பது உள்ளிட்ட பல அதிசயங்களை நிகழ்த்திவந்தார். இதனால் அவர் மக்களிடையே பெரும் பிரபலமானவராக திகழ்ந்தார். ஆனால், இங்குள்ள சிலர் ஹஸ்ரத் தாவூத் ஷாவை இந்த கிராமத்தை விட்டு எப்படியாவது வெளியேற்றவேண்டும் என்று எண்ணினர். இதனை உணர்ந்துகொண்ட அவர் இந்த மண்ணிலேயே நிரந்தரமாக இருந்துவிட வேண்டும் என்று நினைத்தார்.

அந்த கிராமத்தில் இருந்த ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் ஹஸ்ரத் தாவூத் ஷா மிகவும் அன்பாக இருந்தார். ஒருமுறை, அந்த சிறுவர்களை அழைத்தார். ஹஸ்ரத் தாவூத் ஷா ஒரு குழியை தோண்டினார். அதில் படுத்துக்கொண்ட அவர், அந்த சிறுவர்களிடம் மண்ணை போட்டு மூடுமாறு கூறினார். ஆனால், அச்சிறுவர்கள் முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுவர்கள், அதற்கு பதிலாக என்ன தருவீர்கள் என்று ஹஸ்ரத் தாவூத் ஷாவிடம் கேட்டனர்.

அருகில் இருந்த இரு மண் சட்டியை காண்பித்து, அதில் பேரிச்சம்பழம், பொட்டுக்கடலை ஆகியவை உள்ளன என்று கூறினார். மேலும் மண்ணைப் போட்டு குழியை மூடியதும் அதனை எடுத்துக்கொள்ளுமாறு சிறுவர்களிடம் கூறினார்.

ஹஸ்ரத் தாவூத் ஷா கூறியவாறே, அந்த சிறுவர்கள் அவரது மேல் மண்ணைப் போட்டு மூடி சமாதி எழுப்பினர். பின்னர் அந்த சட்டியில் இருந்தவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இத்தனை பெரிய சமாதியா

வீட்டிற்கு சென்ற அந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறினர். இதனைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் மண்வெட்டி, கடப்பாரையை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சமாதி எழுப்பிய இடத்திற்கு ஓடினர்.

ஹஸ்ரத் தாவூத் ஷா வாலி சமாதி
வகீதா சமாதி

ஊர் மக்கள் ஒன்றிணைந்து சமாதி அருகே சென்றனர். மண்ணில் புதைந்திருந்த ஹஸ்ரத் தாவூத் ஷா, ஊர் மக்கள் தன்னை மீட்டு இந்த மண்ணில் இருக்காதவாறு செய்துவிடுவார்கள் என்று எண்ணினார். பின்னர், ஊர் மக்கள் ஒரு புறம் சமாதியை மண்வெட்டியால் வெட்டினர், ஆனால் உள்ளே இருந்த ஹஸ்ரத் தாவூத் ஷாவின் சக்தியால், சமாதி நீண்டுகொண்டே சென்றது. இதனைக் கண்ட ஊர் மக்கள் திகைத்து நின்றனர். சமாதியை இடிக்க வந்தவர்கள் அது நீண்டுகொண்டே சென்றதால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

ஹஸ்ரத் தாவூத் ஷா கால்பகுதி இருந்த திசையில் நீண்டுக்கொண்டே சென்ற சமாதி, ஒரு மரம் இருந்த இடத்தில் தடுக்கப்பட்டு நின்றது. அப்படி நீண்டுகொண்டே சென்ற அந்த சமாதியின் மொத்த நீளம் எவ்வளவு தெரியுமா? இந்த சமாதியின் நீளம் 144 அடி ஆகும்.

இவ்வளவு பெரிய சமாதியை இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. இந்த அதிசயத்தை கண்ட ஊர் மக்கள் அன்றுமுதல் ஹஸ்ரத் தாவூத் ஷா வை தெய்வமாக கருதி வழிபட துவங்கினர். அவருடைய சமாதியை காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருவர்.

இவருக்குப் பின்னர் இவரது தங்கை வகிதாவும் காலமானார். அவருடைய சமாதியும் ஹஸ்ரத் தாவூத் ஷா சமாதிக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. ஆனால் வகிதாவின் சமாதி சராசரி சமாதியைப் போலவே இருக்கும்.

மூச்சு விடும் சமாதிகள்

அளவில் பெரியதாக இருக்கும் வேனாடு தர்காவில் உள்ள ஹஸ்ரத் தாவூத் ஷா சமாதியும் வகிதா சமாதியும் அதிசயம் வாய்ந்ததாக விளங்குகின்றன. இந்த இரண்டு சமாதிகளும் மூச்சு விடும். என்ன மூச்சு விடுமா? என்று பலரும் நகைச்சுவையாக எண்ணலாம். ஆனால், அதுதான் உண்மை. இரண்டு பேரின் சமாதிகளும் மூச்சு விடும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை தினத்தன்று இந்த 2 சமாதிகளும் மூச்சு விடும். அமாவாசை அன்று, ஹஸ்ரத் தாவூத் ஷாவின் அந்த முழு நீள சமாதியிலும், வகீதா சமாதி மீதும் போர்த்தப்பட்டிருக்கும் பச்சை நிறத்திலான துணிகள் எடுக்கப்பட்டு வேறு துணியால் போர்த்தப்படும். பின்னர் அந்த சமாதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்படும். பின்னர், 2 சமாதிகள் முழுவதும் சந்தனம் தெளிக்கப்படும். இவை அனைத்தும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே முடிக்கப்பட்டுவிடும்.

நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி இடையிலான நேரத்தில் அந்த சமாதி மூச்சுவிடும். ஒரு மனிதர் உறங்கும்போது மூச்சுவிட்டால் எப்படி இருக்குமோ, அதேபோல், அந்த இரு சமாதிகள் மெல்ல மூச்சுவிடும். இந்த அதிசயத்தை யார்வேண்டுமானாலும் அமாவாசை தினத்தன்று பார்க்கலாம். அந்த சமாதிகளில் எந்த இடத்தில் இருந்தும் மூச்சுவிடுவது போன்ற அசைவுகள் தோன்றலாம். குறிப்பாக இந்த இடத்தில்தான் மூச்சுவிடுவது தெரியும் என்பது இல்லை.

ஆகையால், இதனை காண அன்றைய தினம் 15,000 முதல் 20,000 மக்கள் வரை தர்காவில் உள்ள சமாதிகளை சுற்றி நின்று கூர்ந்து கவனிப்பர். 

இந்த நிகழ்வினை காண இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தை சேர்ந்த மக்களும் அன்றைய தினம் தர்காவில் தங்கி வழிபாடு நடத்துவர்.

ஏ.ஆர்.ரகுமான் கட்டிக்கொடுத்த சமாதி

144 அடி நீளம்கொண்ட ஹஸ்ரத் தாவூத் ஷா வாலி அவர்களின் சமாதி முதலில் மண்ணால் கட்டப்பட்டது. பின்னர் அங்கு வந்து செல்லும் கால்நடைகளால் அது சேதமடைந்தன. ஆனால், ஒவ்வொரு முறை சேதமடைந்த பிறகும் சில நாட்களில் அந்த சமாதி மீண்டும் தன் நிலைக்கு திரும்பிவிடும் என்று தர்காவின் இமாம் தெரிவித்தார்.

எனினும் அந்த சமாதி பாதுகாப்பாக இல்லை என்ற காரணத்தினால், கான்க்ரீட்-ஐ கொண்டு சமாதியின் இருபுறங்களிலும் பூசப்பட்டது. எனினும் அதன் மேற்பரப்பில் கான்க்ரீட் பூசப்படவில்லை. ஹஸ்ரத் தாவூத் ஷா இந்த கிராமத்தின் மண்ணின் சிறப்புகளை பெரிதும் உணர்ந்ததால், முழுவதும் கான்க்ரீட்டால் சமாதி கட்டப்படவில்லை. சமாதியின் மேற்புறம் மணலாகவே காட்சியளிக்கிறது. அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1994 ஆம் ஆண்டு கட்டிக்கொடுத்துள்ளார். இவர் ஆஸ்கர் விருது பெற்றபின்னரும் ஏ.ஆர்.ரகுமான் இந்த தர்காவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்கா அமைவிடம்

சூளூர்பேட்டைக்கு பேருந்து அல்லது ரயில் மூலம் செல்லலாம்

அங்கிருந்து உள்ளே வேனாடு தர்காவிற்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை.

அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவோ, கார் மூலமாகவோ வேனாடு தர்காவுக்கு செல்லலாம்.

இந்த சமாதி அமாவாசை தினத்தன்று மூச்சுவிடும் அதிசயத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்-ஐ கிளிக் செய்து பார்க்கலாம்..

https://www.youtube.com/watch?v=WPfsnfad2o8


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Ameer hamza 15-04-2018 10:43 PM
மிகவும் அருமையான கட்டுரை.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Vishnu priya 15-04-2018 10:55 PM
Interesting article. Really i got a good information for this day. Thank you so much for sharing your information via article.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Thanika 16-04-2018 06:58 AM
அருமை

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthi 19-04-2018 06:49 PM
Super informatio

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 06-05-2018 03:53 PM
Quite Interesting Bro, Keep writing

Reply Cancel


Your comment will be posted after the moderation