ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 21–02–18

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2018


ராகங்களும் பாடல்களும்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

7. கல்­யாணி

கல்­யாணி ராகத்­தில் எத்­த­னையோ திரை­யிசை பாடல்­கள் வந்­துள்­ளன. அதி­லும் குறிப்­பாக, இசை­ஞா­னி­யின் இசை­ய­மைப்­பில் இந்த ராகத்­தில் இடம்­பெற்ற அனைத்து பாடல்­க­ளும் சூப்­பர் ஹிட் வரி­சை­யில் இன்­றும் ரசி­கர்­க­ளால் கேட்டு மகி­ழப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில், கல்­யாணி ராகத்­தில் அமைந்த ராஜா­வின் பாடல்­களை பார்ப்­போம்.

''வந்­தாள் மகா­லக்ஷ்­மியே'' – கமல்­ஹா­சன், அம்­பிகா உட்­பட பலர் நடித்­தி­ருந்த திரைப்­ப­டம் 'உயர்ந்த உள்­ளம்.' இதில் இசை­ஞா­னி­யின் இசை­யில் அனைத்து பாடல்­க­ளுமே ஹிட். அதில் குறிப்­பாக கல்­யாணி ராகத்­தில் அமைந்­தி­ருந்த

''வந்­தாள் மகா­லக்ஷ்­மியே

என்­றும் அவள் ஆட்­சியே

வந்­தாள் மகா­லக்ஷ்­மியே

என் வீட்­டில்

என்­றும் அவள் ஆட்­சியே

அடி­யே­னின் குடி வாழ தனம் வாழ குடித்­த­னம் புக…

வந்­தாள் மகா­லக்ஷ்­மியே

என் வீட்­டில்

என்­றும் அவள் ஆட்­சியே....''

இப்­பா­டலை எஸ்.பி.பி. மிக அற்­பு­த­மாக பாடி­யி­ருப்­பார். இரவு நேரத்­தில் இப்­பா­டல் தென்­றலை போல் இத­மான தாலாட்டை தரும்.

''இளை­ய­ரா­ஜாங்­கிற ராட்­ச­ஷன் இந்த கல்­யாணி ராகத்தை எவ்­வ­ளவு அற்­பு­தமா, வித­வி­த­மாப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கார்" என்று எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்  முன்­பொரு 'சூப்­பர் சிங்­கர்' மேடை­யில் "விழி­கள் மீனோ மொழி­கள் தேனோ" பாடலை ஒரு போட்­டி­யா­ளர் பாடி முடித்­த­தும் சொல்­லி­யி­ருந்­தார்.

"விழி­கள் மீனோ மொழி­கள் தேனோ" – 'ராகங்­கள் மாறு­வ­தில்லை' என்ற திரைப்­ப­டத்­திற்­காக பாட­லா­சி­ரி­யர் வைர­முத்து வரி­க­ளில், இசை­ஞானி இளை­ய­ராஜா இசை­யில் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம் பாடி­யி­ருந்­தார். எண்­ப­து­க­ளின் முற்­ப­கு­தி­யில் வெளி­வந்த இந்த படத்­தின் பாடலை அப்­போது எல்.பி ரிக்­கார்ட் வழி­யாக சில காது­க­ளுக்­குக் கடத்­தி­யது.  அப்­போ­தெல்­லாம் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்  பாடல்­களை இனம் காணும் அள­வுக்கு அறி­வி­ருந்­தா­லும் இந்த பாடலை ஏனோ பாட­கர் பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா குர­லோடு பொருத்­தியே மனம் ஒப்­பு­வித்­தது.

எப்­படி "உற­வு­கள் தொடர்­கதை உணர்­வு­கள் சிறு­கதை" என்ற பாடலை கே.ஜே.ஜேசு­தாஸ் குர­லுக்­குப் பதி­லாக ஜெயச்­சந்­தி­ரன் குர­லா­கப் பல­ரால் நினைக்க முடி­கின்­றதோ அது போல.

"ஒரு நாள் போதுமா நான் பாட" என்ற 'திரு­வி­ளை­யா­டல்' படப் பாடலை டாக்­டர் பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா பாடும் போது மனம் எஸ்.பி.பி.யாகவே நினைத்து வைத்­தி­ருக்­கும். அதற்கு எதிர்­மா­றாக அமைந்­தி­ருக்­கி­றது இந்த "விழி­கள் மீனோ மொழி­கள் தேனோ" பாடல்.  ஆனால் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்­தான் பாடி­னார் என்­ப­தற்கு முத்­தி­ரை­யாக ஒரு சங்­கதி வந்து விழும் "அடடா கால்­கள் அழ­கிய வாழை" என்று பாடு­மி­டத்­தில் ஒரு வெட்­கப் புன்­னகை. அது­தான் அக்­மார்க் எஸ்.பி.பி.

இந்த பாட­லின் ஆரம்­பமே எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம் ஆலா­ப­னை­யோ­டு­தான் வாத்­தி­யக் கரு­வி­க­ளுக்­குக் கடத்­தும். ஒரு சாஸ்­தி­ரீய சங்­கீ­தத்­துக்­குண்­டான வாத்­தி­யக் கோஷ்­டி­யாக புல்­லாங்­கு­ழல், மிரு­தங்­கம் எல்­லாம் அணி செய்­தா­லும் மிக முக்­கி­ய­மாக வய­லின் வாத்­திய பயன்­பாடு வெகு உச்­ச­மா­னது இந்த பாட­லில். குறிப்­பாக, 1.14 நிமி­டங்­க­ளில் வய­லின் தனித்து நின்று சிறப்­புச் சேர்க்க, 'விட்­டேனா பார்' என்­பது போல புல்­லாங்­கு­ழ­லும், மிரு­தங்­க­மும் சங்­க­மிக்­கும் போது ஒரு மினி இசை வேள்­வியே நடந்து முடிந்­தி­ருக்­கும்.

இம்­மா­தி­யான  எண்­ப­து­க­ளின் ஆரம்­பத்­தில் கொஞ்­சம் சாஸ்­தி­ரீய சங்­கீ­தப் பின்­னணி கொண்ட பாடல்­கள் பல­வற்­றுக்கு வார்த்­தை­க­ளால் அணி செய்­தி­ருக்­கி­றார் புல­வர் புல­மைப்­பித்­தன்.

இந்த பாடல் கவி­ஞர் வைர­முத்­து­வால் எழு­தப்­பட்­டி­ருக்­கி­றது. எனக்­குத் தெரிந்து இந்த அழ­கிய பாடலை தன்­னு­டைய மற்­றைய பாடல்­கள் போல அதி­கம் சிலா­கித்­துப் பேச­வில்லை. ஆனால், இந்த பாட­லின் மகத்­து­வம் இன்­னும் சிறப்­பா­னது.

இதே ராகத்­தில் 'காதல் ஓவி­யம்' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற அரு­மை­யான பாடல்

''நதி­யில் ஆடும் பூவ­னம்

அலை­கள் வீசும் சாம­ரம்

காமன் சாலை யாவி­லும்

ஒரு தேவ ரோஜா ஊர்­வ­லம்

நதி­யில் ஆடும் பூவ­னம்

அலை­கள் வீசும் சாம­ரம்...''

இப்­பா­டலை எஸ்.பி.பியும், எஸ். ஜான­கி­யும் இணைந்து பாடி­யி­ருப்­பார்­கள். ராதா ரசி­கர்­க­ளுக்கு சரி­யான டிரீட் இந்­தப் பாடல். பேர­ழகு ராதா! நிமி­டத்­துக்கு நிமி­டம் மாறும் இவ­ரின் முக­பா­வங்­கள் வாவ்… பாட­லின் இறு­தி­யில் காத­லன் மார்­பில் சாய்ந்து கிறங்­கி­ய­வாறு இருக்­கும் ஒரு எக்ஸ்­பி­ர­ஷன் போதும் இவ­ரது நடிப்­புத்­தி­ற­மைக்கு எடுத்­துக்­காட்டு.

அற்­பு­த­மான இசைக்­கோர்ப்பு… கிளா­சிக்(கல்) மெலடி. பல்­ல­வி­யின் துவக்­கத்­தில் ஜான­கி­யின் ஹம்­மிங்­கும் ''அம்பு தொடுக்­கும் போது நீ துணை'' எனும் போதும், ''இரவு முழுது மில் கீதமே.. ஏ…'' என்று ஆலா­பிக்­கும் போது எஸ்.பி.பியும் விர­கத்­தில் இத­யங்­களை முறுக்­கிப் பிழி­கின்­ற­னர். எனக்கு மிகப்­பி­டித்த பாடல்­க­ளில் மிக­வும் முக்­கிய­ மானது, ''நதி­யில் ஆடும் பூவ­னம்''