சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 333 – எஸ்.கணேஷ்

20 பிப்ரவரி 2018, 02:51 PM

நடி­கர்­கள்: அஜீத், பிரபு, நயன்­தாரா, நமீதா, ரஹ்­மான், ஆதித்யா மேனன், சந்­தா­னம், ஹஸல் கீச்  மற்­றும் பலர். இசை: யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு: நீரவ் ஷா, எடிட்­டிங்: ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு: எல். சுரேஷ், திரைக்­கதை, இயக்­கம்:  விஷ்­ணு­வர்த்­தன், கதை: சலீம் - ஜாவேத், வச­னம்: ராஜ்­கண்­ணன்.

நிழல் உலக தாதா­வான பில்லா (அஜீத்) இண்­டர்­போ­லின் குற்­ற­வா­ளி­கள் பட்­டி­ய­லில் உள்ள நபர். தலை­ம­றை­வாய் இருந்து கொண்டு குற்­றங்­களை நடத்­து­கி­றார். அவரை பிடிப்­ப­தற்­காக தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­ப­வர் டிஎஸ்பி ஜெய­பி­ர­காஷ் (பிரபு).

போலீ­ஸி­ட­மி­ருந்து தப்பி ஓடும் போது ஒரு விபத்­தில் சிக்­கும் பில்லா, படு­கா­ய­ம­டைந்து டிஎஸ்­பி­யின் கண் முன்பே இறந்து விடு­கி­றார். ரக­சி­ய­மாக அவ­னது இறுதி காரி­யத்தை முடிக்­கும் டிஎஸ்பி, அனை­வ­ரி­ட­மும் உண்­மையை மறைத்து விடு­கி­றார். பில்­லா­வின் இறப்பு பற்றி தெரி­யாத நிலை­யில் அவனை பிடிப்­ப­தற்­காக இண்­டர்­போல் அதி­காரி கோகுல்­நாத் (ரஹ்­மான்), ஜெய­பி­ர­கா­ஷோடு இணை­கி­றார்.

பில்­லா­வைப் போல் உருவ ஒற்­றுமை உள்ள சர­வண வேலுவை (அஜீத்) சந்­திக்­கும் ஜெயப்­பி­ர­காஷ், பில்­லா­வைப் போல் நடித்து அவ­னது கூட்­டத்தை பிடித்­துத் தரு­மாறு வேலு­வி­டம் கேட்­கி­றார். அதற்கு பதி­லாக வேலு­வால் வளர்க்­கப்­ப­டும் சிறு­வ­னுக்கு சிறந்த கல்வி வழங்­கு­வ­தாக உறுதி கூறு­கி­றார். மலே­சி­யா­வில் பிக்­பாக்­கெட்­டாக காலம் தள்­ளும் வேலு­வும் இந்த திட்­டத்­திற்கு சம்­ம­திக்­கி­றார்.

ஜெய­பி­ர­கா­ஷால் பயிற்சி அளிக்­கப்­ப­டும் வேலு, விபத்­தில் தனது ஞாப­கங்­களை இழந்­த­வ­ராக நடித்து பில்­லா­வின் கூட்­டத்­திற்கு வரு­கி­றான். மெல்ல மெல்ல அந்த கூட்­டத்­தைப் பற்­றி­யும், பில்­லா­வின் பாஸ் ஜெக­தீ­ஷைப் பற்­றி­யும் தெரிந்து கொள்­கி­றான். டிஎஸ்­பி­யால் அளிக்­கப்­பட்ட பென்­டி­ரை­வில், அந்­தக் கூட்­டத்­தைப் பற்­றி­யும் அவர்­க­ளது தொடர்­பு­கள் பற்­றி­யும் அனைத்து தக­வல்­க­ளை­யும் சேக­ரிக்­கி­றான். இதற்­கி­டையே இவ­னோடு நெருங்­கிப்­ப­ழ­கும் சாஷா (நயன்­தாரா) இவனை கொல்ல நினைக்­கி­றாள். அதற்­குக் கார­ணம் சாஷா­வின் அண்­ணன் ராஜே­ஷும், அவ­னது காதலி ரியா­வும் பில்­லா­வால் கொல்­லப்­பட்­ட­வர்­கள். டிஎஸ்பி மூலம் வேலு­வைப் பற்­றிய உண்­மையை தெரிந்து கொள்­ளும் சாஷா, அவ­னுக்கு உத­வு­கி­றாள்.

பில்­லா­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் கலந்து கொள்ள இருக்­கும் விருந்­தைப் பற்றி வேலு டிஎஸ்­பிக்கு தெரி­விக்­கி­றான். இதை மறைந்­தி­ருந்து கேட்­கும் பில்­லா­வின் காதலி சி.ஜே (நமீதா) வேலுவை காட்­டிக்­கொ­டுக்க நினைக்­கி­றாள். அவர்­க­ளுக்­கி­டையே நடக்­கும் கைக­லப்­பில் குண்­டு­வெ­டித்து சி.ஜே இறக்­கி­றாள்.  விருந்­தில் நடக்­கும் கல­வ­ரத்­தில் ரக­சி­ய­மாக ஜெக­தீ­ஷால் சுடப்­பட்டு டிஎஸ்பி ஜெய­பி­ர­காஷ் இறந்து விடு­கி­றார். கோகுல்­நாத் தலை­மை­யில் இயங்­கும் போலீஸ் வேலுவை கைது செய்­கி­றது. விசா­ர­ணை­யின் போது­தான் பில்லா அல்ல வேலு என்­றும் டிஎஸ்­பி­தான் தன்னை நடிக்­கச்­சொன்­ன­தா­க­வும் கூறு­கி­றான். தன்னை நிரூ­பிப்­ப­தற்கு பென்­டி­ரைவ்­தான் ஆதா­ரம் என்­றும் கூறு­கி­றான்.

கொலைப்­ப­ழி­யி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக போலீஸ் வேனி­லி­ருந்து தப்பி ஓடு­கி­றான். கோகுல்­நாத்­துக்கு போன் செய்து தன்னை ஏரோ பிரிட்­ஜில் சந்­திக்­கு­மாறு கூறு­கி­றான்.  அப்­போது கோகுல்­நாத்­து­தான் ஜெக­தீஷ் என்­ப­தும், டிஎஸ்பி ஜெய­பி­ர­காஷை கொன்­ற­தும் வேலு­வுக்கு தெரி­ய­வ­ரு­கி­றது. வேலுவை சந்­திக்­கும் ஆபீ­சர் அனில் மேனன், ஜெக­தீஷை பிடிப்­ப­தற்கு திட்­டம் போடு­கி­றார். பென்­டி­ரைவை பெறு­வ­தற்­காக சாஷா­வை­யும், கர­ணை­யும் ஜெக­தீஷ் கடத்­து­கி­றான். ரஞ்­சித்­தி­டம் பொய்­யான பென் டிரைவை கொடுத்து இரு­வ­ரை­யும் மீட்­கும்­போது நடக்­கும் சண்­டை­யில் ரஞ்­சித் இறக்­கி­றான். வேலு­வு­டன் சண்­டை­யி­டும் ஜெக­தீஷ் போலீஸ் படையை பார்த்­த­தும் கோகுல்­நாத்­தாக மாறி பில்­லாவை கைது செய்ய சொல்­கி­றான். ஆனால், போலீஸ் இரு­வ­ரின் உரை­யா­ட­லை­யும் கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­தால் உண்மை தெரிந்து கோகுல்­நாத்தை சுட்­டுக்­கொல்­கின்­ற­னர். உண்­மை­யான பென் டிரைவை ஆபீ­சர் மேன­னி­டம் ஒப்­ப­டைக்­கும் வேலு மகிழ்ச்­சி­யோடு விடை­பெ­று­கி­றான்.

இந்த படம் 1980-ல் வெளி­வந்த ரஜி­னி­காந்த் நடித்த 'பில்லா' படத்­தின் ரீமேக். இயக்­கு­னர் விஷ்­ணு­வர்­தன் தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ப திரைக்­க­தை­யில் சில மாற்­றங்­கள் செய்து இப்­ப­டத்தை இயக்­கி­னார். ரஜி­னி­யின் வேடத்தை அஜீத் ஏற்க, நாய­கி­யாக ஸ்ரீபி­ரியா வேடத்­தில் நயன்­தாரா நடித்­தி­ருந்­தார். தயா­ரிப்­பா­ளர் பாலாஜி நடித்­தி­ருந்த டிஎஸ்பி வேடத்­தில் பிரபு நடித்­தார். வில்­ல­னாக மேஜர் சுந்­தர்­ரா­ஜன் நடித்த பாத்­தி­ரத்­தில் ரஹ்­மான் நடித்­தார். படத்­தின் அனைத்து காட்­சி­க­ளும் மலே­சி­யா­வில் பட­மாக்­கப்­பட்­டன.

''சேவற்­கொடி'' பாடல் கோலா­லம்­பூ­ரின் புகழ்­பெற்ற பத்­து­மலை முரு­கன் கோயில் அடி­வா­ரத்­தில் பட­மாக்­கப்­பட்­டது. யுவன் சங்­கர் ராஜா இசை­யில் பாடல்­கள் ஹிட். எம்.எஸ். விஸ்­வ­நா­தன் இசை­யில், கண்­ண­தா­சன் வரி­க­ளில் பழைய 'பில்லா' படத்­தில் இடம் பெற்ற ''மை நேம் இஸ் பில்லா,'' ''வெத்­த­லைய போட்­டேண்டி'' இரு பாடல்­க­ளை­யும் ரீமிக்ஸ் செய்­தி­ருந்­தார் யுவன். பிற மாநி­லங்­கள் மட்­டு­மல்­லாது உலக அள­வி­லும் படம் வெற்­றி­க­ர­மாக ஓடி­யது. அஜீத்­துக்கு ஒரு மாஸ் ஹிட்­டாக அமைந்­தது இப்­ப­டம்.