ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் வோஸ்னியாக்கி

பதிவு செய்த நாள் : 27 ஜனவரி 2018 19:49

மெல்போர்ன்:

     மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.

மெல்போர்ன் நகரின் ரோட் லாவெர் அரினா மைதானத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேனிய வீராங்கனை ஹாலெப்பும் 2ம்நிலை வீராங்கனை டென்மார்க்கை சேர்ந்த வோஸ்னியாக்கியும் மோதினர்.

இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கடும் போராட்டத்துக்கு பின், 7 - 6, 3 - 6, 6 - 4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கரோலின் வோஸ்னியாக்கி வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் 2ம்நிலை வீராங்கனையாக இருந்த அவர் உலக தரவரிசையில் முதல் இடத்தையும் பெற்றார்.
இரண்டாம் இடத்தை வென்ற ஹாலெப், கரோலினாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.