ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி, நவரோ காலிறுதிக்கு முன்னேற்றம்

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2018 15:25

மெல்போர்ன்,

     ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று கரோலின் வோஸ்னியாக்கி, சுவாரெஸ் நவரோவும் காலிறுதிக்கு முன்னேறினர்.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

ராட் லாவர் பகுதியில் நடந்த ஒற்றையர் மகளிர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில் உலகின் இரண்டாம்நிலை வீராங்கனை, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் 19ம் நிலை வீராங்கனை, சுலோவாக்கியா நாட்டின் மக்டலினா ரைபரிகோவாவும் மோதினர்.

இதில் வோஸ்னியாக்கி 6 - 3, 6 - 0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதே போல், மற்றொரு ஆட்டத்தில் 39ம் நிலை, ஸ்பெயின் வீராங்கனை சுவாரெஸ் நவரோவும் 32ம் நிலை வீராங்கனை, எஸ்டோனியாவை சேர்ந்த ஆனெட் கொண்டாகியோனும் மோதினர். இதில் 4 - 6, 6 - 4, 8 - 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நவரோ காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து, காலிறுதிப் போட்டியில் வோஸ்னியாக்கியும் கர்லா சுவாரெஸ் நவரோவும் விளையாட உள்ளனர்.