சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 328 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2018

'ஜென்­டில்­மேன்' வெற்­றிப்­ப­டத்­தைத் தொடர்ந்து தயா­ரிப்­பா­ளர் குஞ்­சு­மோ­னுக்­காக ஷங்­கர் இயக்­கிய இரண்­டா­வது படம் ‘காத­லன்’. இந்த பட­மும் வணி­க­ரீ­தி­யில் வெற்­றிப்­ப­ட­மாக அமைந்து ஷங்­கர் திரை­யு­ல­கில் அழுத்­த­மாக கால் பதிக்க உத­வி­யது.

கதைச் சுருக்­கம்

கல்­லூ­ரி­யில் மாண­வர் தலை­வ­ராக பொறுப்பு வகிக்­கும் பிர­பு­தேவா, நிகழ்ச்சி ஒன்­றுக்கு தலைமை தாங்­கு­வ­தற்­காக கவர்­னர் கிரிஷ் கர்­னாடை அழைக்­கச் செல்­கி­றார். அப்­போது கவர்­னர் மக­ளான நக்­மா­வைப் பார்த்து அவர் மீது காதல் கொள்­கி­றார். நக்மா மீது கொண்ட காத­லால் அவர் நாட்­டி­யம் கற்­றுக் கொள்­ளும் நட­னப்­பள்­ளிக்­குச் சென்று தானும் நட­னம் கற்­றுக் கொள்ள ஆரம்­பிக்­கி­றார். ஆரம்­பத்­தில் நக்மா, பிரபு தேவாவை கண்­டு­கொள்­ளா­மல் இருந்­தா­லும் பின்­னர் அவ­ரைக் காத­லிக்க ஆரம்­பிக்­கி­றார்.

தீவி­ர­வா­தி­க­ளின் அச்­சு­றுத்­தல் இருக்­கும் கார­ணத்­தால், கவர்­னர் தன் மகளை வெளியே எங்­கும் அனுப்­பா­மல் பாது­காப்பு ஏற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­கி­றார். ஆயி­னும், பாது­காப்பு அதி­கா­ரி­களை ஏமாற்­றி­விட்டு பிர­பு­தே­வா­வு­டன் நடன விழா ஒன்­றுக்­குச் சென்­று­வி­டு­கி­றார் நக்மா.

காவ­லர்­கள் இரு­வ­ரை­யும் கண்­டு­பி­டித்து விடு­கி­றார்­கள். பிர­பு­தே­வாவை போலீ­சார் கைது செய்து காவல் நிலை­யத்­தில் வைத்து கடு­மை­யா­கத் தாக்கி சித்­ர­வதை செய்­கின்­ற­னர். போலீஸ்­கா­ர­ரா­கப் பணி­யாற்­றும் பிர­பு­தே­வா­வின் அப்பா எஸ்.பி.பால­சுப்­பி­ர­ணி­யம் ஒரு வழி­யாக தன் மகனை வெளியே கொண்டு வரு­கி­றார்.

வெளியே வந்த பிர­பு­தேவா, நக்­மா­வைப் பார்க்க கவர்­னர் மாளி­கைக்­குச் செல்­லும்­போது, பல குண்டு வெடிப்பு சம்­ப­வங்­க­ளுக்­குக் கார­ண­மான ரகு­வ­ரன் கவர்­னர் ஆத­ர­வு­டன் அவ­ரது மாளி­கை­யி­லேயே மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. கவர்­னரே பொது மருத்­து­வ­ம­னை­யில் குண்­டு­வைத்து பொது­மக்­க­ளைக் கொல்­லத் திட்­ட­மிட்­டி­ருப்­பது பிர­பு­தே­வா­வுக்­குத் தெரிய வர, தனது கல்­லூரி நண்­பர்­கள் உத­வி­யு­டன் பொது­மக்­க­ளைக் காப்­பாற்­று­கி­றார்.

சில சுவா­ரஸ்­யங்­கள்

‘காத­லன்’ படம் நான்கு தேசிய விரு­து­களை வென்­றது. ‘என்­ன­வளே அடி என்­ன­வளே’ என்ற பாடல் மூலம் பின்­ன­ணிப் பாட­க­ராக அறி­மு­க­மான உன்னி கிருஷ்­ணன் தான் பாடிய முதல் பாட­லுக்கே தேசிய விரு­தைப் பெற்­றார். சிறந்த ஒலிப்­ப­தி­வுக்­காக ஏ.எஸ். லட்­சுமி நாரா­ய­ணன், வி.எஸ். மூர்த்தி ஆகி­யோ­ரும், படத்­தொ­குப்­புக்­காக லெனின் வி.டி. விஜ­ய­னும், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்­டுக்­காக வெங்­கி­யும் ‘காத­லன்’ படம் மூலம் தேசிய விரு­து­கள் பெற்­ற­னர்.

‘ஹம்ஸே ஹே முக்­கா­பலா’ என்ற பெய­ரில் இந்­தி­யி­லும், ‘பிரே­மிக்­குடு’ என்ற பெய­ரில் தெலுங்­கி­லும் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்டு இந்­தப் படம் வெளி­யா­னது. இப்­ப­டத்­தில் இடம்­பெற்ற ஒன்­பது பாடல்­க­ளும் ‘சூப்­பர் டூப்­பர்’ ஹிட்­டாகி படத்­தின் வெற்­றிக்கு பெரிய அள­வில் துணை­பு­ரிந்­தன.

கண்­ணா­டி­யா­லேயே வடி­வ­மைக்­கப்­பட்ட பேருந்து ஒன்­றில் பிர­பு­தேவா ‘ஊர்­வசி ஊர்­வசி’ என்ற பாட­லுக்கு நட­ன­மா­டு­வ­தும், ‘என்­ன­வளே அடி என்­ன­வளே’ என்ற பாட­லுக்கு கம்ப்­யூட்­டர் கிரா­பிக்ஸ் பயன்­ப­டுத்­தப்­பட்ட வித­மும் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­தன.

நடிக, நடி­கை­யர் – பிர­பு­தேவா, எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம், கிரிஷ் கர்­னாட், ரகு­வ­ரன், வடி­வேலு, அஜய் ரத்­னம், அல்லு ராம­லிங்­கய்யா, தாமு, நக்மா, மனோ­ரமா.

திரைக்­குப் பின் – படத்­தொ­குப்பு : பி.லெனின் வி.டி. விஜ­யன், ஒளிப்­ப­திவு : ஜீவா, பாடல்­கள் : வாலி, வைர­முத்து, இசை : ஏ.ஆர். ரஹ்­மான், வச­னம் : பால­கு­மா­ரன், தயா­ரிப்பு : கே.டி. குஞ்­சு­மோன், திரைக்­கதை, இயக்­கம் : ஷங்­கர்.