புயலை கிளப்பிய ‘தி சைலன்ட் மேன்’

பதிவு செய்த நாள் : 15 டிசம்பர் 2017 09:15

பெர்த் 

: இங்­கி­லாந்து - ஆஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடையே நடை­பெ­றும் ஆஷஸ் டெஸ்ட்  கிரிக்கெட் தொடர், எந்த ஆண்­டும் இல்­லா­மல் இந்த ஆண்­டில் உச்­ச­கட்ட பர­ப­ரப்பை எட்­டி­யுள்­ளது. 2-–0 என்ற தொடர் முன்­னி­லை­யில் உள்ள ஆஸி., அணி, நேற்று காலை பெர்த் மைதா­னத்­தில் இங்­கி­லாந்­து­ட­னான 3வது போட்­டி­யில் பங்­கேற்­றது. ஒரு­

பு­றம் போட்டி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்க, மறு­பு­றத்­தில் ஆஷஸ் தொட­ரில் வெற்றி தோல்­வியை நிர்­ணயம் செய்­யும் வகை­யில் மேட்ச் பிக்­சிங் நடை­பெற்­ற­தாக இங்­கி­லாந்­தின் சன் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இது­கு­றித்து தங்­கள் நிரு­பர்­கள் நடத்­திய விசா­ர­ணை­யில் இந்­தி­யர் உட்­பட 2 புக்­கிக­ளைத் தொடர்பு கொண்­ட­தா­க­வும், ஆட்­டத்­தின் ஒரு பகு­தி­யில் விளை­யாட்­டின் போக்கை திருப்ப 60 லட்­சம் ரூபா­யும், ஒரு நாளின் 2 பகு­தி­க­ளில் ஆட்­டத்தை திசை திருப்ப ஒரு கோடியே 20  லட்­சம் ரூபாயும் பேரம் பேசப்­பட்­ட­தா­க­ சன் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது. அதே நேரத்­தில், இந்த பேரத்­துக்கு ஒப்­புக் கொண்­டால், ஆஸி., கிரிக்­கெட் அணி­யில் உள்ள ‘தி சைலன்ட் மேன்’ என்ற அடை­மொ­ழி­யைக் கொண்ட நப­ரி­டம் பேசு­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த செய்தி ஆஷஸ் தொடர் மீதான மதிப்பை குறைத்­துள்­ள ­தாக ஆஸி., கிரிக்­கெட் தலை­வர் ஜேம்ஸ் சுத்­தர்­லேண்ட் தெரி­வித்­துள்­ளார். இது­குறித்து விரி­வான விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தா­க­வும், ஐசி­சி­யின் விசா­ ர­ணைக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்க உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

‘தவறு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் பார­பட்­சம் இல்­லா­மல் நட­வ­டிக்கை பாயும்’ என்­கி­றார் சுத்­தர்­லேண்ட். இந்­தியா, பாகிஸ்­தான், வங்­க­தே­சம் நாடு­களே பெரும்­பா­லும் மேட்ச் பிக்­சிங் ஊழ­லில் அடி­பட்ட நிலை­யில், இப்­போது ஆஸி., சிக்­கிக் கொண்­டுள்­ளது. அது­சரி, யாருங்க ‘தி சைலன்ட் மேன்’?.