கவ்லூன்,
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.
ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில், உலகின் நம்பர் 3 இந்தியாவின் சிந்து, முதலிடத்திலுள்ள சீன தைபேயின் டாய் டிசூ இங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 18 - 21 என இழந்த சிந்து, அடுத்த செட்டையும் 18 - 21 என பறிகொடுத்தார். 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 18 - 21, 18 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். | ![]() |