பண்ணைக்கழிவு மேலாண்மை திருப்பணிகரிசல்குளத்தில் பயிற்சி

பதிவு செய்த நாள்

19
பிப்ரவரி 2016
20:12

நெல்லை அருகே திருப்பணி கரிசல்குளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள் தலைமை வகித்தார். பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்திகள் குறித்து அவர் பேசினார்.

பஞ்., தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி வரவேற்றார். பண்ணைக்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள், மனித சுகாதாரச்சீர்கேடு, சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து அவர் விளக்கினார்.

பண்ணைக்கழிவுகளை மதிப்புக்கூட்டி அதிக லாபம் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துடன்  பயன்படுத்துவது, களைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பது, காளான் வளர்ப்பு குறித்து வேளாண்மை அலுவலர் முத்துகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி மேலாளர்கள் டெல்பின் மேரி, இசக்கிமுத்துப்பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர் ஹென்றி ராஜேஷ் பேசினர்.

* மானூர் அருகே வடுகன்பட்டியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நுண்ணீர் பாசன அமைப்பு பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவிப் பொறியாளர் திருமலைக்குமார் வரவேற்றார். சொட்டுநீர்ப்பாசன அமைப்பு குறித்து உதவிப்பொறியாளர் ஜெயராம் பேசினார். சொட்டுநீர்ப்பாசன அமைப்பு பராமரிப்பு குறித்து நெட்டா பர்ம் ராமசாமி பயிற்சி அளித்தார்.