40,000 போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவமனை ஊழியருக்கு விருது

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2017 03:08

தானே:

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி அங்கு 40,000 போஸ்ட்மார்ட்டங்கள் செய்த  ஊழியருக்கு அம்மாவட்டத்தின் உயரிய விருதான ”தானே பூஷண்” விருது வழங்கப்பட்டது.

62 வயதாகும் பனாரசி சவுதாலா என்பவர் தானே மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பணியாற்றிவந்தார். அவரது 40 வருடகால சேவையில் 40,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் அவருக்கு தானே மாநகராட்சி “தானே பூஷன்” விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

பனாரசி சவுதாலாவிற்கு தானே பூஷண் விருதை தானே மாவட்ட பொறுப்பு அமைச்சர் எக்நாத் ஷிண்டே வழங்கினார்.  

இந்த விருதை பனாரசி சவுதாலாவிற்கு வழங்கவேண்டும் என அம்மாவட்ட மேயர் மீனாக்‌ஷி ஷிண்டே பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் “தானே கவுரவ்” மற்றும் “தானே குனிஜன்” ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.