புட்பாலில் பார்வாட் ஸ்பெஷலிஸ்ட்! – அஸ்வின் குமார்

பதிவு செய்த நாள்

13
பிப்ரவரி 2016
21:59

* ‘‘ரெட்டைவால் குருவி’’யில் ஹீரோவாக நடித்தவர், அஷ்வின் குமார். 

* அவருடைய குடும்பத்துக்கும் நடிப்புத்துறைக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

* ஆனால், அஷ்வின் குமாருக்கு மட்டும் ஏனோ நடிப்பு மீது அதிக ஆர்வம்!

* கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

* அப்பா (லட்சுமிகாந்தன்), அம்மா (நிர்மலா), ஓர் அக்காள், அஷ்வின் – குடும்பத்தில் மொத்தம் ௪ பேர்.

* அப்பா ஊரில் ஒரு பிசினஸ்மேன். அம்மா ஒரு குடும்பத்தலைவி. அக்காள் ஓர் ஒர்க்கிங் உமன்.

* அஷ்வினின் கல்வி தகுதி என்ன தெரியுமா? பி.இ., எம்.பி.ஏ.,

* பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை குமரகுரு கல்லூரியிலும், எம்.பி.ஏவை பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜியிலும் படித்தவர்.

* எம்.பி.ஏ., படிக்கும் காலத்தில் அவருடைய சகமாணவர் ஒருவர் ‘குளோனிங் காதல்’  என்கிற பெயரில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்தார். அந்த ஆல்பத்தில் அஷ்வினின் பங்களிப்பும் உண்டு.

* சென்னையில், ஒரு தியேட்டரில் அஷ்வின் படம் பார்க்க போகும் போது அங்கே யதேச்சையாக சிவகார்த்திகேயனை சந்தித்தார். அந்த சமயத்தில், சிவகார்த்திகேயனிடம் பீல்டுக்கு வருவதற்கான ஆலோசனை கேட்க, அவர் சொன்ன டிப்ஸால் இன்று அஷ்வின் ஒரு நடிகராக இருக்கிறார்.

* தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ‘விஜய் ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் விஜய் டிவி ஆடிஷன் நடத்தியது. அப்படி கோயம்புத்தூரில் ஆடிஷன் நடக்கும் போது அஷ்வின் கலந்து கொண்டார். இறுதியாக, ௨௦ பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அஷ்வினும் ஒருவர்.

* நடிப்பே சுத்தமாக தெரியாத அஷ்வினை ‘மோல்டு’ பண்ணுவதில் அதிக அளவில் சிரத்தை எடுத்துக்கொண்டார் ‘‘ரெட்டைவால் குருவி’’ டைரக்டர் ஜெரால்ட். படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போதே சுமார் இரண்டு மாதங்களாக நடிப்பு, உடல் மொழி போன்றவற்றை அஷ்வினுக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தார்.

* டைரக்டர் ஜெரால்டை பெருமைப்படுத்தி கூறுகையில், ‘‘அவரே ஒரு நல்ல நடிகர். எங்களுக்கு நன்றாக நடித்துக் காட்டுவார். அப்படி அவர் நடித்துக் காட்டும் போது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இதை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு நடித்தாலே, யாரும் பெரிய நடிகர் / நடிகையாகி விடலாம்!’’ என்று தெரிவித்தார்.

* அஷ்வின் ஒரு கால்பந்தாட்ட வீரருமாவார்! கால்பந்தாட்டத்தில் அவர் ஒரு பார்வர்ட் நிபுணராம்! கால்பந்தாட்டம், நடனம் இரண்டும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.

* பாலிவுட்டில் ஷா ருக் கானும், கோலிவுட்டில் மாதவனும் அவருக்கு பிடித்த நடிகர்கள்.

* அஷ்வின் வைத்திருக்கும் அடுத்த குறி..... சந்தேகமே வேண்டாம்..... சினிமாதான்! அதிலும், கமர்ஷியல் படம்தான்!

– பரமக்குடியான்