வடஇந்திய பெண்களைவிட தென்னிந்திய பெண்கள் சிறந்தவர்கள்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017

வட இந்திய பெண்கள் மற்றும் தென்னிந்திய பெண்கள்... ஒரே விஷயத்தில் இவர்கள் இருவரும் எப்படி வேறுப்படுகின்றனர். இவர்களது கண்ணோட்டம் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி இருக்கிறது என்ற ஒரு சின்ன சர்வே சமிபத்தில் வெளியிடப்பட்டது. அது தான் இது. பேஷன், மேக்கப், பழகுதல், டேட்டிங் என வட இந்திய, தென்னிந்திய பெண்களே தங்கள் திருவாய் திறந்து கூறிய அவர்கள் பற்றிய சின்ன, சின்ன விஷயங்கள்...

ஸ்டார்­டிங் பிராப்­ளம்

வட இந்­திய பெண்­கள் எந்த ஆணு­ட­னும் எடுத்த எடுப்­பில் பேச தயங்க மாட்­டார்­கள். ஆனால், தென்­னிந்­திய பெண்­க­ளி­டம் அந்த தயக்­கம் இருக்­கும். மேலும், ஒர் ஆணு­டன் பேசி­னால் எங்கே அவன் காதலை பிர­போஸ் செய்­து­வி­டு­வானோ என்ற அச்­சம் தென்­னிந்­திய பெண்­க­ளி­டம் அதி­கம் இருக்­கி­ற­தாம்.

பேஷன்

மும்பை போன்ற பெரு­ந­க­ரங்­க­ளில் தொப்­புள் தெரி­யும்­ப­டி­யான உடை­கள் சர்வ சாத­ர­ண­மாக மாறி­யுள்­ளது. ஆனால், இன்­றும் சென்னை போன்ற பெரு­ந­க­ரங்­க­ளில் அந்த அளவு அதிக கிளா­மர், செக்ஸி விஷ­யங்­கள் பெண்­கள் வெளிப்­ப­டி­யாக செய்­வ­தில்லை என பெண்­கள் கூறு­கின்­ற­னர்.

டேட்­டிங்

டேட்­டிங் என்­பது ஒரு­வரை பற்றி ஒரு­வர் தெரிந்­துக் கொள்ள பழ­கும் செயல். ஆனால், இந்­தி­யா­வில் மட்­டும் தான் டேட்­டிங் குறித்து பல­த­ரப்­பட்ட பார்­வை­கள் இருக்­கின்­றன.

சிலர் அது செக்ஸ் வைத்­துக் கொள்­ள­வது என பார்­கின்ற்­னார். சிலர் அது பார்க், பீச் என சுற்­று­வது என பார்க்­கின்­ற­னர். இதில் சத­வீ­தத்­தில் பார்க்­கும் போது அதி­க­மான வட இந்­திய பெண்­கள் டேட்­டிங்கை சாத­ர­ண­மாக எடுத்­துக் கொள்­கின்­ற­னர். தென்­னிந்­திய பெண்­கள் டேட்­டிங் என்­றால் அபத்­த­மாக பார்க்­கின்­ற­னர்.

பெண் அடிமை

திரு­ம­ணத்­திற்கு பிறகு பெண்­களை அடி­மை­யாக நடத்­தும் பழக்­கம் இன்­றும் வட இந்­தி­யா­வில் அதி­க­மாக இருக்­கி­றது. வட இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளில் நாம் இதை காண முடி­யும். ஆனால், தென்­னிந்­தி­யா­வில் அந்த அளவு கொடு­மை­க­ளுக்கு பெண்­கள் உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என பெண்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

பொது­வெ­ளி­யில் சீன்

காத­லர்­க­ளா­கவே இருப்­பி­னும் பொது இடத்­தில் கண்­ணி­ய­மாக நடந்­துக் கொள்­வது என்று வரும் போது தென்­னிந்­திய பெண்­கள் தான் டாப்­பில் இருக்­கின்­ற­னர். வட இந்­திய பெண்­கள் (ஆண்­க­ளும்) ஹாலி­வுட், பாலி­வுட் படங்­க­ளில் வரு­வது போல நடு­ரோட்­டில் கிஸ், ஹக்ஸ் என தேவை­யில்­லாத சீன் அதி­க­மாக இருக்­கி­றது என கருத்து கூறி­யுள்­ள­னர்.

ஸ்ட்ரக்­சர்

உடல் வடிவ பரா­ம­ரிப்பு என வரும் போது தென்­னிந்­திய பெண்­க­ளி­டம் கொஞ்­சம் புசி­னார் போல் இருக்க வேண்­டும் என்ற கண்­ணோட்­டம் தான் இருக்­கி­றது.

வட இந்­திய பெண்­கள் தங்­கள் உடல் ஸிம்­மாக இருக்க வேண்­டும் என அதற்­கென மெனக்­கெட்டு டயட், உடற்­ப­யிற்சி எல்­லாம் அதி­கம் செய்­கி­றார்­கள். இது தென்­னிந்­திய பெண்­க­ளி­டத்­தில் இல்­லா­த­திற்கு கார­ணம் தென்­னிந்­திய ஆண்­கள் ஒல்­லி­யான பெண்­களை விரும்­பா­த­து­தான் கார­ணம் என்று கூறு­கின்­ற­னர்.

சிக்­க­னம்

பணத்தை செலவு செய்­வ­தில் தென்­னிந்­தியா பெண்­கள் கெட்­டிக்­கா­ரர்­கள். மூன்று ரூபாய் பிஸ்­கட் பாக்­கெட் வாங்­கி­னால் கூட ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு மூன்று பேராக சேர்ந்து வாங்­கு­வார்­கள்.அதே போல தென்­னிந்­திய பெண்­கள் இது­வரை பெரி­தாக பப், பார்ட்­டி­க­ளில் மூழ்­க­வில்லை. வட இந்­திய பெண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தென்­னிந்­திய பெண்­கள் சிக்­க­னத்­தில் கெட்டி.

மேக்­கப்

மேக்­கப் என்­றால் அதற்­கான முழு பொருள் அறிந்­த­வர்­கள் வட இந்­திய பெண்­கள். தென்­னிந்­திய பெண்­கள் கிரீம் பூசி, பவு­டர் அடித்து, லிப்ஸ்­டிக் இட்­டுக் கொண்­டால் மேக்­கப் ஓவர் என கரு­து­கின்­ற­னர். ஆனால், சத­வீ­தத்­தில் பார்க்­கும் போது வட இந்­திய பெண்­கள் தான் மேக்­கப்­பில் சிறந்து காணப்­ப­டு­கின்­ற­னர்.

இந்தி

வட இந்­திய பெண்­கள் எந்த மாநி­லத்­திற்கு சென்­றா­லும் இந்தி தான் பேசு­வார்­கள். அந்த மாநி­லத்­தின் லோக்­கல் மொழி கற்­ப­தில் அவர்­க­ளுக்கு சிர­மம் இருக்­கும். ஆனால், தென்­னிந்­திய பெண்­கள் கேரளா சென்­றால் மலை­யா­ளம், கர்­நா­டகா சென்­றால் கன்­ன­டம், ஆந்­திரா சென்­றால் தெலுங்கு, தமிழ்­நாடு சென்­றால் தமிழ் என அந்­தந்த மாநி­லத்­திற்கு சென்று பணி­பு­ரி­யும் போது அந்த மாநி­லத்­தின் மொழியை எளி­தாக கற்­றுக் கொள்­வார்­கள்.

சீனு

வட இந்­திய பெண்­கள் தென்­னிந்­தியா வந்­தால், தாங்­கள் ஏதோ அயல்­நாட்­டில் இருந்து சுற்­றுலா வந்­தது போல பந்தா காட்­டு­வார்­கள். ஆனால், தென்­னிந்­திய பெண்­கள் வட இந்­தியா சென்­றால் அப்­படி எல்­லாம் பந்தா இருக்­காது. அச்­சம் வேண்­டு­மா­னால் இருக்­கும் என சில பெண்­கள் கருத்து கூறி­யுள்­ள­னர்.