பிசினஸ்: தொழில் உண்டாகும் ஏற்றம் இறக்கங்களை சமாளிப்பது எப்படி...? – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017
சிறிய அள­வில் சொந்­த­மாக தொழில் செய்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கி­றது. சொந்­த­மா­கத் தொழில் செய்­ப­வர்­க­ளி­டம் தொடர்ச்­சி­யாக அல்­லது குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­யில் பண­வ­ரத்து இருக்­கும். தின­மும் பண­வ­ரத்து இருக்­கும் தொழிலை செய்­ப­வர்­கள்­கூட பணப் பிரச்­னை­யால் பெரும் அவ­திப்­ப­டு­வ­தைப் பல சம­யங்­க­ளில் பார்த்­தி­ருப்­போம்.  நிதி நெருக்­கடி இல்­லா­மல் தொழிலை நடத்­து­வது, தொழி­லில் ஏற்ற இறக்­கம் இருந்­தா­லும், அத­னால் குடும்­பத்­தின் பொரு­ளா­தா­ரம் பாதிப்­ப­டை­யா­மல் தொழிலை நடத்­திச் செல்­வது எப்­படி என்­பது குறித்து விளக்­க­மாக பார்ப்­போம்.

தொழில் கடன் யாரி­ட­மி­ருந்து...: தொழி­லுக்­குத் தேவைப்­ப­டும் நிதி­யைக் கட­னாக வாங்­கு­கி­றீர்­களா அல்­லது கையி­லி­ருக்­கும் சேமிப்பை வைத்து தொழில் துவங்­கு­கி­றீர்­களா என்­பதை முத­லில் முடிவு செய்ய வேண்­டும். தேவை­யான பணத்­தில் ஒரு பகு­தியை கடன் வாங்­கு­கி­றீர்­கள் எனில், அது எந்த வகை­யான கடன் என்­பதை முடிவு செய்­வது முக்­கி­யம். அதா­வது, வங்கி அல்­லது வட்­டிக் கடை அல்­லது தெரிந்­த­வர்­க­ளி­டம் வாங்­கப் போகி­றீர்­களா என்­பதை முடிவு செய்து, அந்­தக் கட­னுக்­கான வட்டி விகி­தம் என்ன என்­பதை யும் முடிவு செய்­வது நல்­லது.

வட்டி விகி­தம்: தொழில் துவங்­கு­வ­தற்­கா­கக் கடன் வாங்­கு­வது இயல்­பான ஒன்­று­தான். ஆனால், அந்­தக் கடனை வங்­கி­யில் வாங்­கு­வது சிறப்­பாக இருக்­கும். வங்­கிக் கட­னுக்­குத்­தான் வட்டி விகி­தம் குறை­வாக இருக்­கும். தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளி­னால் அதிக வட்­டிக்கு வெளி­யில் கடன் வாங்­கி­விட்­டீர்­கள் எனில் அதற்­கான வட்­டியை ஒவ்­வொரு மாத­மும் தவ­றா­மல் செலுத்த வேண்­டும். வட்­டியை போல அசல் தொகையை விரை­வாக அடைத்­து­வி­டு­வது நல்­லது.

கடன் சத­வி­கி­தம்: கடன் இல்­லா­மல் தொழில் நடத்­து­வது சிர­மம்­தான். தொழி­லில் கடன் என்­பது எப்­போ­தும் இருந்­து­கொண்டே  இருக்­கும். கட­னுக்­கான சத­வி­கி­தத்தை உங்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் வைத்­துக் கொள்­வது நல்­லது. அதா­வது, உங்­கள் தொழில் மூல­த­னத்­துக்­குச் சம­மான அள­வில் கடன் வைத்­துக் கொள்­ள­லாம். இதை­விட அதி­க­மா­கும்­போது கடன் வாங்­கு­வ­தற்கு பல­முறை யோசிப்­பது நல்­லது.

நிலை­யான செல­வு­கள்: தொழி­லில் லாபம் வந்­தா­லும், நஷ்­டம் வந்­தா­லும் நிலை­யான செல­வு­கள் இருந்­து­கொண்­டு­தான் இருக்­கும். அதா­வது, ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம், மின்­சா­ரக் கட்­ட­ணம், வாடகை, மூலப்­பொ­ருட்­கள் வாங்­கு­வது, தின­சரி செலவு, வரி ஆகிய செல­வு­கள் எப்­போ­துமே இருக்­கும். இந்த செல­வு­க­ளுக்­கான தொகையை கையில் வைத்­தி­ருப்­பது முக்­கி­யம். இவற்­றைச் சமா­ளிக்க புதி­தா­கக் கடன் வாங்­கக்­கூ­டாது. எனவே, ஒவ்­வொரு மாத­மும் எவ்­வ­ளவு செல­வா­கும் என்­பதை முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு,  குறைந்­தது ஆறு மாத காலத்­துக்­குத் தேவை­யான தொகையை வைத்­தி­ருப்­பது  நல்­லது.

லாபம் கிடைக்­கும்­போது: லாபம் கிடைக்­கும்­போது அதை உட­ன­டி­யா­கச் சொத்­தாக மாற்ற நினைக்­கக் கூடாது. எவ்­வ­ளவு லாபம் கிடைத்­துள்­ளது, அத­னு­டைய சத­வி­கி­தம் என்ன என்­ப­தைப் பார்க்க வேண்­டும். அடுத்­தது அவ­ச­ர­மா­கத் திரும்­பச் செலுத்த வேண்­டிய கடன் அல்­லது அதிக வட்­டிக்கு வாங்­கிய கடன் ஆகி­ய­வற்றை உட­ன­டி­யா­கத் திரும்­பச் செலுத்த வேண்­டும்.

அடுத்து, நிலை­யான செல­வு­க­ளுக்­கான தொகை­யைத் தனி­யாக ஒதுக்­க­வேண்­டும். மீத­மி­ருக்­கும் தொகை­யில் ஒரு குறிப்­பிட்ட சத­வி­கி­தத்தை உங்­க­ளுக்­காக எடுத்­துக்­கொண்டு, மீதத் தொகையை நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்ய வேண்­டும்.

எந்த வகை முத­லீடு: முத­லீடு என்­பது அசையா சொத்­தாக மட்­டும் இருக்­கக் கூடாது. அது உற்­பத்தி சார்ந்த விஷ­ய­மா­க­வும் இருக்க வேண்­டும். அதா­வது, பொரு­ளா­தா­ரம் நன்­றாக வளர்ச்சி அடைந்­து­வ­ரும் சம­யங்­க­ளில் அதிக ஆர்­டர்­கள் கிடைக்க வாய்ப்­புள்­ளது. இத­னால் விற்­ப­னை­யும் அதி­க­ரிக்­கும் என்ற சம­யத்­தில் உற்­பத்­திக்கு தேவை­யான இயந்­தி­ரங்­கள் வாங்­கு­வது, கூடு­த­லா­கத் தொழி­லா­ளர்­க­ளைப் பணிக்கு அமர்த்­து­வது போன்­ற­வற்­றைச் செய்­ய­லாம். இது தொழிலை வளர்ச்சி அடைய செய்­யும். அதா­வது, உற்­பத்தி அதி­க­ரித்து அதிக விற்­பனை நடக்­கும்­போது தொழி­லில் வளர்ச்சி அதி­க­ரிக்­கும். அதே­ச­ம­யத்­தில் தொழி­லின் மதிப்­பும் அதி­க­ரிக்­கும்.

இயந்­தி­ரங்­கள் வாங்­கும்­போது: தொழில் வளர்ச்சி அடைய வேண்­டும் எனில் புதி­தாக இயந்­தி­ரம் வாங்­கு­வது அவ­சிய மான­தாக இருக்­கும். புதிய இயந்­தி­ரங்­களை இறக்­கு­மதி செய்­யப்­போ­கி­றோமா அல்­லது உள்­நாட்­டி­லேயே வாங்­கப் போகி­றோமா என்­பதை முடிவு செய்ய வேண்­டும்.

மேலும், சில இயந்­தி­ரங்­கள் குறிப்­பிட்ட சில நாட்­க­ளுக்கு மட்­டும் தேவை எனில் அந்த இயந்­தி­ரங்­களை வாடகை அல்­லது லீஸுக்கு எடுக்­கப் போகி­றோமா என்­பதை முடிவு செய்­வது நல்­லது. தேவை­யின் அடிப்­ப­டை­யில் இயந்­தி­ரங்­களை வாங்­கு­வதா அல்­லது வாட­கைக்கு எடுப்­பதா என்­பதை முடிவு செய்ய வேண்­டும். இயந்­தி­ரங்­களை புதி­தாக வாங்­கும்­போது எவ்­வ­ளவு செல­வா­கும், அதே வாட­கைக்கு எடுக்­கும்­போது எவ்­வ­ளவு செல­வா­கும் என்­பதை முன்­கூட்­டியே கணக்­கிட்டு பார்க்க வேண்­டும். அதன் அடிப்­ப­டை­யில் எது சிறந்­தது என்­பதை முடிவு செய்­வது நல்­லது.

இன்­ஷூ­ரன்ஸ்: தொழில் செய்­ப­வர்­கள் தங்­க­ளுக்­கும் தங்­கள் தொழி­லுக்­கும் என தனித்­த­னி­யாக இன்­ஷூ­ரன்ஸ் எடுப்பது நல்­லது. அதா­வது, தொழி­லில் எதிர்­பா­ராத வித­மாக அசம்­பா­வி­தம் (தீ, வெள்­ளப் பெருக்கு, பூகம்­பம், அதிக மின்­சார வரத்­தால் ஏற்­ப­டும் பாதிப்பு) நிக­ழும்­போது அதி­லி­ருந்து காத்­துக்­கொள்ள இன்­ஷூ­ரன்ஸ் உத­வும். மேலும், தொழிற்­சா­லை­யில் உள்ள விலை உயர்ந்த இயந்­தி­ரங்­க­ளுக்­குத் தனித்­த­னி­யாக இன்­ஷூ­ரன்ஸ் எடுப்­ப­தும் அவ­சி­யம்.  தொழி­லா­ளர்­க­ளுக்­குத் தனி­யாக இன்­ஷூ­ரன்ஸ் எடுப்­பது  முக்­கி­யம். ஏதா­வது அசம்­பா­வி­தம் நிக­ழும் சம­யங்­க­ளில் இழப்­பீடு பெற வச­தி­யாக இருக்­கும். இல்­லை­யெ­னில் உங்­க­ளின் லாபத்­தில் ஒரு­ப­குதி குறைய வாய்ப்­புள்­ளது.

அவ­சர கால நிதி: குடும்­பத்­தைப் போலவே, நிறு­வ­னங்­க­ளுக்­கும் அவ­ச­ரத் தேவை­கள் இருக்­கும். எனவே, அதற்­காக ஒரு குறிப்­பிட்ட தொகை எடுத்து வைப்­பது அவ­சி­யம். நிறு­வ­னத்­தில் லாபம் குறை­யும்­போது அல்­லது வேறு அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு அதை எடுத்­துக்­கொள்­ள­லாம். ஒவ்­வொரு மாத­மும் ஏற்­ப­டும் செல­வைப் போல 10 மடங்கு தொகையை எடுத்து வைப்­பது நல்­லது.

தின­சரி செல­வு­கள்: தொழி­லில் தின­மும் ஏற்­ப­டும் வரவு மற்­றும் செலவு குறித்து எழுதி வைப்­பது முக்­கி­யம். இதன் அடிப்­ப­டை­யில்  என்­னென்ன செல­வு­கள் உள்­ளது, அந்­தச் செல­வு­க­ளைக் குறைக்க வேண்­டுமா அல்­லது அதி­க­ரிக்க வேண்­டுமா என்­பதை முடிவு செய்ய வேண்­டும்.

பணப் பரி­வர்த்­த­னை­கள்: சிறிய அள­வில் தொழில் செய்­ப­வர்­கள் பணம் சார்ந்த பரி­வர்த்­த­னை­கள் அனைத்­தை­யும் வங்கி மூல­மாக மேற்­கொள்­வதே சிறந்­தது. அப்­போ­து­தான் தொழில் மூலம் வரும் வரு­மா­னத்­தை­யும் செல­வு­க­ளை­யும் சரி­யா­கக் கணக்­கிட முடி­யும்.  வங்கி மூல­மாக பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரிக்­கும் போது தொழில் வளர்ச்­சிக்­கா­கக் கடன் வாங்­கு­வது எளி­தா­க­வும் இருக்­கும். பணப் பரி­வர்த்­த­னை­களை காசோலை மூல­மாக செய்­வ­தும் நல்­லது.

குடும்ப தொழில்: தொழி­லில் கிடைக்­கும் லாபத்­தைத் தொழில் வளர்ச்­சிக்­கா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­வது நல்­லது. அந்­தப் பணத்­தைக் கொண்டு குடும்­பத் தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­ளக் கூடாது. இப்­ப­டிச் செய்­யும்­போது வீண் குழப்­பங்­கள் ஏற்­பட வாய்ப்பு உள்­ளது. எனவே, ஒவ்­வொரு மாத­மும் குறிப்­பிட்ட அளவு தொகையை உங்­க­ளின் தேவையை நிறை­வேற்­றிக் கொள்ள எடுத்­துக் கொள்­ள­லாம். அந்­தத் தொகை­யில் குடும்­பத் தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­வது நல்­லது. பிள்­ளை­க­ளின் படிப்பு, திரு­ம­ணம் ஆகி­ய­வற்­றுக்கு தேவை­யான பணத்தை மொத்­த­மா­கத் தொழி­லி­ருந்து எடுக்­கக் கூடாது.

ஆய்வு முக்­கி­யம்: சொந்­த­மா­கத் தொழில் செய்­ப­வர்­கள் எதிர்­கா­லத்­தில் உற்­பத்தி, விற்­பனை, ஆர்­டர்­கள் எப்­படி இருக்­கும் என்­பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்­யும்­போ­து­தான் தொழில் வளர்ச்சி குறித்­துத் திட்­ட­மிட முடி­யும். அதா­வது, எதிர்­கா­லத்­தில் விற்­பனை அதி­க­மாக இருக்­கும் எனில், அதற்­கேற்ப உற்­பத்­தியை அதி­க­ரிக்க முடி­யும். மேலும், தொழில் வளர்ச்சி என்­பது தொடர்ச்­சி­யாக இருக்க வேண்­டும். அதிக ஏற்ற இறக்­கங்­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுப்­பது நல்­லது.

ஆலோசனைக்கு... : 93807-–55629