விவேகானந்தராக நடித்தது மறக்க முடியாதது! – கிரிஷ்

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

சுவாமி விவே­கா­னந்­த­ராக நடித்­ததை என் வாழ்க்­கை­யில் மறக்­கவே முடி­யாது என்­கி­றார் கிரிஷ்.

எண்­ணற்ற சீரி­யல்­க­ளில் நடித்­தி­ருக்­கும் அவ­ரு­டைய பேட்டி:–

''கல்­லுாரி மாண­வ­னாக இருக்­கும் போதே நான் மேடை­நா­ட­க­னாகி விட்­டேன். ௧௮ வய­தி­லேயே மேடை நாட­கத்­துக்­காக மேக்–­அப் போட ஆரம்­பித்து விட்­டேன். முதன்­மு­த­லாக, சங்­க­மித்ரா என்­னும் மலை­யாள நாட­கக்­கு­ழு­வில் நடித்­தேன். ''மேரா நாம் கில்­லர்'' எனது முதல் தமிழ் நாட­கம். அதில் ஒரு போலீஸ் இன்ஸ்­பெக்­ட­ராக நடித்­தேன். ஒய்.ஜி. மகேந்­தி­ரா­வின் யுஏஏ நாட­கக்­கு­ழு­வில் சுமார் ௧௦ ஆண்­டு­கள் நடித்­துக் கொண்­டி­ருந்­தேன். அதன்­பின், அவ­ரு­டைய மகள் மது­வந்தி நடத்தி வரும் மகம் எண்­டர்­பி­ரை­சஸ் நாட­கக்­கு­ழு­வில் நடிக்க ஆரம்­பித்­தேன். இன்­றைக்­கும் நடித்து வரு­கி­றேன்.

எழுத்­தா­ளர் மா.பெ. சிவ­கு­மார் மூல­மாக விஜய் டிவி­யில் ஒளி­ப­ரப்­பான 'திங்­கள் திகில்' சீரி­ய­லில் முதன்­மு­த­லாக நடித்­தேன். அதில் சைக்கோ கேரக்­ட­ரில் நடித்­தேன். பின்­னர் கே. பால­சந்­தர் சாரின் கவி­தா­லயா நிறு­வ­னம் தயா­ரித்த 'சாந்தி நிலை­யம்', 'இலக்­க­ணம் மாறுதோ' ஆகிய சீரி­யல்­க­ளில் நடித்­தேன். விஜய் டிவி­யில் ஒளி­ப­ரப்­பான 'சுவாமி விவே­கா­னந்­தர்' சீரி­ய­லில் சுவாமி விவே­கா­னந்­த­ரா­க­வும், 'மகா­பா­ரத'த்தில் பல­ரா­மர் கேரக்­ட­ரி­லும், 'ரோமா­புரி பாண்­டிய'னில் பாண்­டிய நாட்டு மன்­னன் பெரும்­வ­ழுதி பாண்­டி­ய­னா­க­வும், மற்­றும் 'திருப்­பாவை', 'அனு­பல்­லவி', 'வெள்ளை தாமரை', 'ரெங்க விலாஸ்' உட்­பட பல சீரி­யல்­க­ளி­லும் நடித்­தி­ருக்­கி­றேன்.

இவற்­றில் 'சுவாமி விவே­கா­னந்­தர்', 'திருப்­பாவை', 'மகா­பா­ர­தம்', 'ரோமா­புரி பாண்­டி­யன்' ஆகிய சீரி­யல்­கள் எனக்கு பெரிய அள­வில் பெய­ரும் புக­ழும் கொடுத்­தவை. கலை­ஞ­ரின் எழுத்­தில் உரு­வான 'ரோமா­புரி பாண்­டிய'னில் நடித்­தது எனக்கு பெரு­மை­யா­க­வும், சவா­லா­க­வும் இருந்­தன. அவ­ரு­டைய வச­னத்தை பேசி நடிக்­கும் போது இன்­னும் தமிழை நிறைய தெரிந்து கொள்ள வேண்­டு­மென்­கிற ஆர்­வம் எந்­த­வொரு நடி­க­ருக்­கும், நடி­கைக்­கும் கண்­டிப்­பாக வந்­து­வி­டும்.

திருச்­சூர், எனக்கு பூர்­வீ­கம். எனது அப்பா உன்னி கிருஷ்­ணன் பிர­பல மலை­யாள நாடக, சினிமா நடி­கர். ௮௦ படங்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றார். பிர­பல மலை­யாள கவி­ஞர் வெள்­ளத்­தோல் நாரா­யண மேனன், என் அப்­பா­வின் மாமா ஆவார். அம்மா சுஷ்மா ஒரு குடும்­பத்­த­லைவி. நான் ஒரே வாரிசு. சென்­னை­யில்­தான் படித்­தேன். டி.ஜி. வைஷ்­ணவா கல்­லுா­ரி­யில் பி.ஏ. (பொரு­ளா­தா­ரம்) படித்து முடித்­தேன்.''

சீரி­யல்­கள், மேடைநாட­கங்­க­ளில் நடித்­துக் கொண்டே கடந்த ௧௦ ஆண்­டு­க­ளாக ஓட்­டல் சீஷெல் ரெசி­டன்­ஸி­யில் மேலா­ள­ராக பணி­பு­ரிந்­தும் வரு­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.