சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 312– எஸ்.கணேஷ்

12 செப்டம்பர் 2017, 10:20 PM

நடி­கர்­கள்: ஆர்யா, பிர­காஷ்­ராஜ், நவ்­தீப், சமிக்ஷா, ஆதித்யா மேனன், கிருஷ்ணா மற்­றும் பலர். இசை: யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு: நீரவ் ஷா,

எடிட்­டிங்:  ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு :  'புன்­ன­கைப்பூ' கீதா, வச­னம் : ரமணா கோபி­நாத், கதை, திரைக்­கதை  இயக்­கம் : விஷ்­ணு­வர்த்­தன்.

நாகர்­கோ­வி­லி­லி­ருந்து சென்­னைக்கு பொறி­யி­யல் படிக்க வரும் அப்­பாவி பிரா­மண இளை­ஞன் சத்யா (நவ்­தீப்). தனது நண்­ப­னான கிருஷ்ணா மற்­றும் தோழி­யான சந்­தியா (சமிக்ஷா) ஆகி­யோ­ரோடு மகிழ்ச்­சி­யாக வாழும் சத்­யா­வுக்கு, தாதா ஆதி­நா­ரா­ய­ணன் (பிர­காஷ்­ராஜ்), அவ­ரது வளர்ப்பு மகன் குட்டி (ஆர்யா) ஆகி­யோ­ரால் பிரச்னை ஆரம்­பிக்­கி­றது. ஆதி­நா­ரா­ய­ணன் ஆட்­க­ளுக்­கும் அவ­ரது எதி­ரி­க­ளுக்­கு­மி­டையே நடக்­கும் துப்­பாக்கி சண்­டை­யில் தவ­று­த­லாக சந்­தி­யா­வின் மீது குண்டு பாய்­கி­றது. அவ­ளது நிலைக்கு கார­ண­மான ஆதி மற்­றும் குட்டி மீது கமி­ஷ­னர் தியா­க­ரா­ஜ­னி­டம் (ஆதித்யா மேனன்) புகார் கொடுக்­கி­றான் சத்யா.

தனது வளர்ப்பு மகன் குட்­டியை காப்­பாற்­று­வ­தற்­காக புகாரை திரும்­பப் பெறும்­படி ஆதி­யின் ஆட்­க­ளால் மிரட்­டப்­ப­டும் சத்­யா­வுக்கு புதி­ய­தோர் அதிர்ச்சி காத்­தி­ருக்­கி­றது. சத்­யா­வின் பூர்­வீ­கத்தை தெரிந்து கொள்­ளும் ஆதி­யும், குட்­டி­யும் அவன் மேல் பாச­மழை பொழி­கி­றார்­கள். தனது உண்­மை­யான தந்தை ஆதி­தான் என்­பதை அறிந்து கொள்­ளும் சத்யா, என்ன முடிவு எடுப்­பது என தெரி­யா­மல் குழப்­பம் அடை­கி­றான். சத்யா அவர்­க­ளது அன்பை புரிந்து கொள்­ளும் நேரத்­தில் ஆதி­யும், குட்­டி­யும் தங்­க­ளால் அவ­னது வாழ்­வில் எந்த பிரச்­னை­யும் இருக்­கக்­கூ­டாது என்ற எண்­ணத்­தோடு அவனை விட்டு வில­கி­வி­டு­கி­றார்­கள்.

2005-ம் ஆண்டு வெளி­யான இந்த படம் 175 நாட்­கள் ஓடி வெற்றி பெற்­றது. புது மாதி­ரி­யான கதை­யோட்­டத்­தோடு இளைய தலை­மு­றையை வெகு­வாக கவர்ந்த இந்த படம் யுவன் சங்­கர் ராஜா­வின் தெறிக்க வைக்­கும் இசை­யால் எல்­லோ­ரை­யும் திரும்­பிப்­பார்க்க வைத்­தது.

மலே­சிய ரேடி­யோ­வில் புகழ்­பெற்ற தொகுப்­பா­ள­ராக திகழ்ந்த ‘புன்­ன­கைப்பூ’ கீதா, வெளி­நாட்­டி­லி­ருந்து தமிழ் திரைப்­ப­டத்­திற்கு முதல் பெண் தயா­ரிப்­பா­ள­ரான பெரு­மையை பெற்­றார். இப்­ப­டம் தெலுங்­கில் 'கலி­சுண்டே' என்ற பெய­ரில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்­டது. இந்த படத்­திற்­காக தனது முதல் பிலிம்­பேர் விருதை ஆர்யா வாங்­கி­னார்.

மியூ­சிக்­கல் ஹிட் என்று குறிப்­பி­டும் வகை­யில் தனது இசை­யால் படத்­தின் வெற்­றி­யில் பெரும் பங்கு வகித்­தார் யுவன் சங்­கர் ராஜா. இப்­ப­டத்­தில் பாப் பாடல்­கள் பாடு­வ­தில் புகழ்­பெற்ற மஹுவா காமத் மற்­றும் அனுஷ்கா மன்­சன்டா ஆகி­யோரை பாட­வைத்­தார். ''தீப்­பி­டிக்க'' பாட­லின் இடையே 1941-ல் பாப­நா­சம் சிவ­னின் இசை­யில் வெளி­வந்த ‘அசோக்­கு­மார்’ படத்­தில் இடம்­பெற்ற பாட­லான ‘பூமி­யில் மானிட’ என்ற எம்.கே. தியா­க­ராஜ பாக­வ­த­ரின் பாடலை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தார். இந்த முயற்சி பலத்த வர­வேற்பை பெற்­றது.