இங்கே வண்டி ஓட்ட முடியாது! – -அதுல்யா ரவி

12 செப்டம்பர் 2017, 10:18 PM

‘காதல் கண் கட்­டுதே’ படத்­தில் யார் இந்த சித்­தி­ரப்பாவை என்று கேட்­கு­ம­ள­விற்கு சூப்­ப­ராக இருந்­தார் அதுல்யா ரவி.  இப்­போது சமுத்­தி­ரக்­க­னி­யு­டன் 'ஏமாளி' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருந்த அவரை சந்­தித்­த­போது....

* உங்­களை பற்றி?

கோவை  நான் பிறந்து, வளர்ந்­தது. சுத்த தமி­ழச்சி. அப்­பா­வுக்கு ரியல் எஸ்­டேட் பிசி­னஸ். அம்மா ஹோம் மேக்­கர். எனக்கு ஒரு தம்பி இருக்­கான். இன்­ஜி­னி­ய­ரிங் இரண்­டாம் ஆண்டு படிக்­கி­றான். தாத்தா, பாட்­டின்னு ஒரே குடும்­பமா இருக்­கோம். நான் பி.டெக்கை கோவை­யி­லும் எம்.டெக்கை சென்­னை­யி­லும் கம்ப்­ளீட் பண்­ணி­னேன்.

* சினி­மா­வில் நடிக்க வீட்­டில் எப்­படி சம்­ம­தித்­தார்­கள்?

அப்பா, அம்மா சின்ன வய­தி­லேயே எங்­க­ளுக்கு முழு சுதந்­தி­ரம் கொடுத்­துத்­தான் வளர்த்­தாங்க. நான் இன்­ஜி­னி­ய­ரிங் படிச்­ச­தும் அப்­ப­டித்­தான், நடிக்க வந்­த­தும் அப்­ப­டித்­தான். நான் சினி­மா­வில் நடிக்க வந்­தது ஒரு விபத்து மாதிரி. படிக்­கும் போது நண்­பர்­கள் ஒரு குறும்­ப­டம் எடுத்­தார்­கள். அதில் நான் நடித்­தேன்.

அதே­போல் ‘காதல் கண் கட்­டுதே’ படத்­தில் ஒர்க் பண்­ணிய அனை­வ­ருமே பிரண்ட்ஸ். இயக்­கு­நர் சிவ­ராஜ் உட்­பட அதில் சம்­பந்­தப்­பட்ட டெக்­னீ­ஷி­யன்ஸ் அனை­வ­ரும் நாலாப்­பக்­க­மும் காசை புரட்டி சொந்­தமா கேமரா உட்­பட படப்­பி­டிப்­புக் கரு­வி­கள் வாங்கி படம் எடுத்­தார்­கள்.  என் பங்­கிற்கு சம்­ப­ளம் வாங்­கா­மல் நடித்­தேன். ரிலீ­சுக்கு அப்­பு­றம் அவங்­க­ளாவே சம்­ப­ளம் கொடுத்­தார்­கள். அந்த படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­த­தும், உன் இஷ்­டப்­ப­டியே சினி­மா­வில் நடி என்று வீட்­டில் சொல்­லி­விட்­டார்­கள்.

* நடித்­துக் கொண்­டி­ருக்­கும் ‘ஏமாளி’ பத்தி சொல்­லுங்­க­ளேன்?

டைரக்­டர் வி.இசட். துரை ‘காதல் கண் கட்­டுதே’ பார்த்­து­விட்டு அழைத்­தார். ஆடி­ஷன் கூட பண்­ணலே. டைரக்டா ஷூட்­டிங் போயிட்­டோம். ஆனால், முந்­தைய படத்­து­டன் ஒப்­பீடு செய்­யும்­போது இதில் நேர் எதிர் ரோல் பண்­றேன். ஐடி­யில் வேலை பாக்­குற பொண்ணு கேரக்­டர். கொஞ்­சம் மாடர்னா வரு­வேன். இதுக்கு மேல் என்­னு­டைய ரோலை பற்றி விரி­வாக சொல்ல முடி­யாது.

* சமுத்­தி­ரக்­கனி?

கனி சார் மிகப்­பெ­ரிய திற­மை­சாலி. செட்ல எப்­ப­வும் ஜாலியா இருப்­பார். ஒருத்­தரை விடா­மல் எல்­லா­ரை­யும் கலாய்ப்­பார். பெரிய நடி­கர், இயக்­கு­நர் என்ற பயம் இல்­லா­மல் பழக முடிந்­தது. கூட நடிக்­கி­ற­வங்க நல்லா பண்­ணினா ஸ்பாட்­லயே பாராட்­டு­வார்.

* படிப்பு – நடிப்பு – எது?

இனி­மேல் படிக்­கிற ஐடியா சுத்­தமா இல்லை. ரொம்­பவே படிச்­சாச்சு. கொஞ்­சமா நடிச்­சா­லும் நல்ல படங்­கள் பண்­ண­ணும்.

* பிடித்த ஹீரோ?

அஜீத், விஜய், சிவ­கார்த்­தி­கே­யன், தனுஷ்ன்னு பெரிய லிஸ்ட். மற்­ற­படி இவர் கூட டூயட் பாட­ணும், அவர் கூட டூயட் பாட­ணும் என்ற டிரீம் எல்­லாம் இல்லை. அது அது அப்­பப்போ அதுவா அமை­யும்.

* காதல்?

பசங்க மீது வெறும் கிரஷ்­தான் உண்டு. என்­னு­டைய நட்பு வட்­டா­ரம் ரொம்ப பெரிது. அஞ்சு பொண்­ணுங்க, அஞ்சு பசங்­கன்னு நாங்க பெரிய கேங். அப்­படி இருந்­தா­தான் எனக்­கும் பிடிக்­கும். காதல் மீது நம்­பிக்கை உண்டு. ஆனால் அதுக்­கான டைம் இன்­னும் வரலே.

* சினி­மா­விேல உங்­க­ளுக்கு ரோல் மாடல் யார்?

அப்­படி யாரும் இல்லை. நயன்­தா­ரா­வின் போல்ட்­னஸ் பிடிக்­கும். ஆனால் யாரை­யும் காப்பி அடிக்க பிடிக்­காது. எனக்கு என்ன வருமோ, அதை யூனிக்கா பண்­ணு­வேன்.

* கவர்ச்­சியா நடிப்­பீங்­களா?

எனக்கு ஹோம்­லி­தான் பிடிக்­கும்.  ஆனால், ஹோம்­லியா மட்­டும் பண்­ணி­னால் இங்கே வண்டி ஓட்ட முடி­யா­துன்­னும் தெரி­யும். ‘நாகேஷ் திரை­ய­ரங்­கம்’ படத்­தில் காது கேளாத, ஊமைப் பெண்­ணா­கப் பண்­ணி­யி­ருக்­கி­றேன். அந்த மாதிரி சேலஞ்­சிங்­கான ரோல் பண்­ண­ணும். தட்ஸ் ஆல்!