முதல் வேலையே கோலிய துாக்­கு­ற­து­தான்: ஆஸி., கேப்­டன் ஸ்மித் பிளான்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:11


சென்னை:

 ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி கேப்­டன் ஸ்டீவ் ஸ்மித் தலை­மை­யில் இந்­தி­யா­வில் சுற்­றுப் பய­ணம் மேற் கொண்­டுள்­ளது. 5 ஒரு நாள் மற்­றும் 3 டி20 போட்­டி­க­ளில் பங்­கேற்­க­வுள்­ளது. இன்று பிர­சி­டென்ட் லெவன் அணி­யு­ட­னான பயிற்சி ஆட்­டத்­துக்கு சென்­னை­யில் தயா­ராகி வரு­கி­றது. முதல் ஒரு நாள் போட்டி செப்­டம்­பர் 17ம் தேதி சென்னை சேப்­பாக்­கம் மைதா­னத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. முன்­ன­தாக ஆஸி, கேப்­டன் ஸ்டீவ் ஸ்மித் சென்­னை­யில் நேற்று நிரு­பர்­க­ளி­டம் பேசி­னார். அப்­போது பேசிய அவர், ‘இந்­தத் தொடர் சவா­லா­ன­தா­கத்­தான் இருக்­கும். இந்­திய அணி­யைப் பொறுத்­த­வரை எங்­கள் முதல் இலக்கு கோலி­தான். எவ்­வ­ளவு வேக­மாக அவரை ஆட்­டம் இழக்­கச் செய்ய முடி­யுமோ, அந்­த­ள­வுக்கு எங்­கள் ஆட்­டம் எளி­தாக இருக்­கும்.

இந்­திய அணி­யில் உள்ள அபா­ய­ர­க­ர­மான ஆட்­டக்­கா­ரர்­க­ளில் கோலி முதன்­மை­யா­ன­வர்.  ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் அவ­ரது சாத­னை­கள் அபா­ர­மா­னவை. எனவே, அவரை களத்­தில் கவ­ன­மாக கையாள வேண்­டி­யுள்­ளது. அத­னால், போட்­டி­க­ளில் அவரை விரை­வில் ஆட்­டம் இழக்­கச் செய்­வ­தில் கவ­னம் செலுத்­து­வோம். இதை மட்­டும் நாங்­கள் சரி­யாக செய்­து­விட்­டால், இந்­தத் தொடர் எங்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மான தொட­ராக இருக்­கும்.

அதே நேரத்­தில் கோலி மட்­டு­மல்ல, ஒட்டு மொத்த இந்­திய அணி­யை­யும் நாங்­கள் கடந்த இலங்­கைத் தொட­ரின் போது கவ­னித்­தோம். இந்­திய அணி இலங்­கை­யில் ஒரு அற்­பு­த­மான கிரிக்­கெட்டை விளை­யாண்­டுள்­ளது. இந்த சிறப்­பான ஆட்­டம்­தான் இந்­தி­யாவை சொந்த மண்­ணில் எதிர்த்து விளை­யா­டும் ஒரு சரி­யான சவா­லை­யும் கொடுத்­துள்­ளது. இந்­திய அணி­யில் அஸ்­வின், ஜடேஜா ஆகி­யோர் இல்­லா­தது ஒரு பிரச்­னையே இல்லை. டெஸ்ட் மற்­றும் ஒரு நாள் தொடர்­கள் வெவ்­வே­றா­னவை. இந்­தி­யா­வின் ஒரு நாள் அணி­யில் அக்­சார் படேல், யஷ்­வேந்­திர சாஹல் மற்­றும் குல்­தீப் யாதவ் போன்ற திற­மை­யான பந்து வச்­சா­ளர்­கள் உள்­ள­னர்.  கடந்த பிப்­ர­வரி - மார்ச் மாதங்­க­ளில் நடை­பெற்ற டெஸ்ட் போட்­டி­கள் போல் அல்­லா­மல், இந்த ஒரு நாள் தொடர் சிறப்­பாக இருக்­கும்’ என்­றார்.