தடைக்கு பின்­னர் களம் காணும் ரொனால்டோ

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:10


ஸ்பெயின்:

போர்ச்­சுக்­கல் நாட்­டின் கால்­பந்து நட்­சத்­தி­ர­மான ரொனால்டோ, ஸ்பெயின் நாட்­டின் ரியல் மேட்­ரிட் கிளப் அணிக்­காக விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கி­றார். விளை­யாட்­டுக்­காக ரியல் மேட்­ரிட் கிளப்­பி­டம் பெற்ற சம்­ப­ளத்­தில், ஸ்பெயின் அர­சுக்கு செலுத்த வேண்­டிய தொகையை செலுத்­தா­மல் ஏமாற்­றி­ய­தாக அவர் மீது வழக்கு தொட­ரப்­பட்டு, விசா­ர­ணை­யில் உள்­ளது.

இந்­நி­லை­யில், கடந்த மாதம் பார்­சி­லோனா அணி­யு­டன் நடை­பெற்ற ஸ்பானிஷ் சூப்­பர் கப் போட்­டி­யில் ரியல் மேட்­ரிட் அணி வெற்­றி­பெற்­றது. எனி­னும், போட்­டி­யின்­போது ரெப்­ரி­யி­டம் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோ, கோபத்­தில் அவ­ரு­டன் வாக்­கு­வா­தம் செய்­தார். தள்­ளு­முள்­ளு­வில் ஈடு­பட்­டார். ரெப்­ரி­யின் புகா­ரின் பேரில் விசா­ரணை நடத்­திய ஸ்பெயின் கால்­பந்து கூட்­ட­மைப்பு, அவரை  4 போட்­டி­க­ளுக்கு சஸ்­பென்ட் செய்­தது. இத­னால், போர்ச்­சுக்­கல் அணியை உல­கக்­கோப்பை கால்­பந்து போட்­டி­க­ளுக்­குத் தகு­தி­பெ­றச் செய்­யும் பணி­யில் ரொனால்டோ கவ­னம் செலுத்­தி­வந்­தார். உல­கக்­கோப்பை தகு­திச் சுற்­றுப் போட்­டி­யில் போர்ச்­சுக்­கல் அணிக்­கான போட்­டி­க­ளுக்கு நீண்ட நாட்­கள் உள்­ளது.

அதே­நே­ரத்­தில் ரொனால்­டோ­வுக்கு ஸ்பெயின் கால்­பந்து கூட்­ட­மைப்பு விதித்த 4 போட்­டி­க­ளுக்­கான தடைக்­கா­லம் முடி­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து நாளை சைப்­ரஸ் நாட்­டின் கிளப் அணி­யான அபோ­யல் அணி­யு­டன் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யில் ரொனால்டோ களம்  இறங்­கு­வார் என்று ரியல் மேட்­ரிட் பயிற்­சி­யா­ளர் ஜிடேன் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார். ரொனால்டோ களம் இறங்­கு­வது உறு­தி­யான நிலை­யில், ரியல் மேட்­ரிட் அணி உற்­சா­கத்­து­டன் உள்­ளது.