சிந்து - சாய்­னாவை ஒப்­பி­டவே முடி­யாது: கோபி­சந்த்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:09


சென்னை:

இந்­திய பேட்­மின்­டன் அணி­யின் தேசிய பயிற்­சி­யா­ள­ராக உள்ள கோபி­சந்த், ஐத­ரா­பாத்­தில் உள்ள தன் அகா­டமி வழி­யாக சிந்து, காஷ்­யப், அஜய் ஜெய­ராம், பிர­னோய், சாய் பிர­னீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் உட்­பட பல நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு பயிற்சி கொடுத்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு கோபி­சந்த் அளித்த பேட்­டி­யின்­போது, ‘சிந்து - சாய்­னா­வின் பலம், பல­வீ­னம் என்ன?’ என்று கேள்வி கேட்­கப்­பட்­டது.

இந்­தக் கேள்­விக்கு பதில் கூறிய கோபி­சந்த், ‘நிச்­ச­ய­மாக நீங்­கள் சாய்னா, சிந்­துவை ஒப்­பிட்டு பேசவே முடி­யாது. கார­ணம், இவர்­கள் 2 பேரும் வெவ்­வேறு கால­கட்­டத்­தில் பேட்­மின்­டன் துறை­யில் களம் இறங்­கி­ய­வர்­கள். சாய்னா 2006-07ம் ஆண்­டில் பேட்­மின்­ட­னில் களம் இறங்­கி­ய­போது, அப்­போ­தைய ஒற்றை வீராங்­க­னை­யாக அவர் வலம் வந்­தார். சாய்­னா­வு­டன் ஒப்­பி­டும்­போது சிந்து மிக­வும் இளைய வீராங்­கனை. சிந்து மிக­வும் வித்­தி­யா­ச­மான வீராங்­கனை. இரு­வ­ரை­யும் ஒப்­பிட முடி­யாது. இரு­வ­ரும் உடல், மன ரீதி­யாக வலு­வான வீராங்­க­னை­கள். களத்­தில் எந்த ஒரு சூழ்­நி­லை­யி­லும் விட்­டுக் கொடுக்­கா­த­வர்­கள். இரு­வ­ரும் சவால்­களை எதிர் கொள்ள சளைக்­கா­த­வர்­கள். ஆனால், அவர்­கள் களப் போராட்­டத் தன்­மையை என்­னால் கணிக்க முடி­யும்.

கிளாஸ்­கோ­வில் நடை­பெற்ற உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யின் இறு­திப் போட்டி சிந்­து­வின் சிறப்­பான விளை­யாட்­டுத்­தி­ற­மைக்கு சான்­றா­கும். ஆனா­லும், கடந்த ஆண்டு ஒலிம்­பிக் போட்­டி­யின் அரை இறு­தி­யில் ஜப்­பான் நாட்­டின் நோசோமி ஒக்­கு­ஹா­ராவை சிந்து வீழ்த்­தி­ய­து­தான் பெஸ்ட் என்­பேன்.   சாய்னா மீண்­டும் என் முகா­முக்கு பயிற்­சிக்­குத் திரும்­பி­யுள்­ளார். அவ­ருக்கு நான் 2004-14ம் ஆண்டு வரை பயிற்சி அளித்­துள்­ளேன். அவர் இப்­போ­துள்ள இந்­திய பேட்­மின்­டன் வீரர்­கள மற்­றும் வீராங்­க­னை­க­ளுக்கு சிறந்த முன்னு­ தார­ணம்’ என்­றார்.