யுவ­ராஜ் ஒரு பீனிக்ஸ்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:08புது­டில்லி:

ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ராக இந்­திய அணி 5 ஒரு நாள் மற்­றும் 3 டி20 தொடர்­க­ளில் விளை­யா­ட­வுள்ள நிலை­யில், இதற்­கான இந்­திய அணி­யும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பட்­டி­ய­லில் அணி­யின் சீனி­யர் வீர­ரான யுவ­ராஜ் சிங் தேர்வு செய்­யப்­ப­ட­வில்லை. முன்­ன­தாக இலங்­கைக்கு எதி­ரான தொட­ரின் போதும் யுவ­ராஜை தேர்­வுக் குழு­வி­னர் கண்டு கொள்­ள­வில்லை.

இந்­நி­லை­யில், இந்­திய கிரிக்­கெட்­டின் முன்­னாள் தேர்­வுக் குழுத் தலை­வர் சபா­க­ரீம் இது­கு­றித்து டில்­லி­யில் நிரு­பர்­க­ளி­டம் பேசும்­போது,

‘ யுவ­ராஜ் சிங்கை தேர்­வுக் குழு­வி­னர் கண்டு கொள்­ளா­மல் இருப்­பது வருத்­த­மான விஷ­யம். ஆனால், ஒரு விஷ­யத்­தைப் புரிந்து கொள்ள வேண்­டும். யுவ­ராஜ் தனக்கு பிரச்னை ஏற்­ப­டும்­போ­தெல்­லாம், அதி­லி­ருந்து புத்­து­ணர்ச்­சி­யு­டன் மீண்டு வரு­வார். சாம்­ப­லில் இருந்து உயிர்த்­தெ­ழும் பீனிக்ஸ் பற­வை­யைப் போல் யுவ­ராஜ் மீண்­டும் மீண்­டும் எழுச்­சி­பெற்று, அணிக்­காக விளை­யா­டு­வார். தேர்­வுக் குழு­வி­னர் தங்­கள் சுய­லா­பத்­து க்­காக அவரை புறக்­க­ணித்­துள்­ள­னர். ஆனால், அவர் பீனிக்ஸ் பற­வை­யைப் போன்­ற­வர் என்­பதை தேர்­வுக் குழு­வி­னர் மறந்­து­விட வேண்­டாம். இதை என் கடந்த கால அனு­ப­வத்­தில் இருந்தே கூறு­கி­றேன்.

இப்­போ­தும் கூட யுவ­ராஜ் சிங் ஒரு சாம்­பி­யன் பேட்ஸ்­மேன்­தான். இதில் மாற்­றுக் கருத்­துக்கு இடம் இல்லை. அதே நேரத்­தில் யுவ­ராஜ் சிங் தன் உடல் தகு­தி­யைய  நிரூ­பிக்க மீண்­டும் உள்­ளூர் போட்­டி­க­ளில் பங்­கேற்று விளை­யாட வேண்­டாம், மாறாக தேர்­வா­ளர்­கள் கவ­னத்தை தன் பக்­கம் திசை திருப்­பும் வகை­யில் அவர் விளை­யாட வேண்­டும்’ என்­றார்.