அமெ­ரிக்க டென்­னிஸ்: பட்­டம் வென்­றார் நடால்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:08


நியூ­யார்க்:

டென்­னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர்­க­ளில் ஒன்­றான அமெ­ரிக்க ஓபன் டென்­னிஸ் போட்­டி­கள், அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் நடை­பெற்று வந்­தது. நேற்று இதன் இறு­திப்­போட்டி நடை­பெற்­றது. இதில் ஸ்பெயின் நாட்­டின் ராபெல் நடா­லும், தென்­னாப்­பி­ரிக்­கா­வின் கெவின் ஆண்­டர்­ச­னும் மோதி­னர். இந்­தப் ÷ பாட்­டி­யில் நடால் தொடக்­கம் முதலே ஆதிக்­கம் செலுத்­தி­வந்­தார். முதல் செட்டை 6-–3 என்ற புள்­ளி­க­ளி­லும், 2வது செட்டை 6-–3 என்ற புள்­ளி­க­ளி­லும் நடால் கைப்­பற்­றி­னார். 3வது செட் ஆட்­டம் மிகுந்த விறு­வி­றுப்­பு­டன் இருந்­தது. 3செட் ஆட்­டத்­தில் கெவின் ஆண்­டர்­சன் கொஞ்­சம் வேகம் காட்­டி­னார். ஆனா­லும், நடா­லின் சிறப்­பான ஆட்­டம் அவரை தடுத்து நிறுத்­தி­யது. இத­னால், 3வது செட் ஆட்­டத்தை 6-–4 என்ற புள்­ளி­கள் கணக்­கில் நடால் கைப்­பற்­றி­னார். இதன் மூலம் 6-–3, 6-–3 மற்­றும் 6-–4 என்ற செட்­க­ளில் அவர் ஆண்­டர்­சனை தோற்­க­டித்து கோப்பையை கைப்­பற்­றி­னார்.

ஆண்­கள் டென்­னிஸ் தர வரி­சைப் பட்­டி­ய­லில் நம்­பர் ஒன் இடத்­தில் உள்ள நடால், இந்த ஆண்­டின் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்­டத்தை கைப்­பற்­றி­யுள்­ளார் என்­ப­தும், அமெ­ரிக்க கிராண்ட் ஸ்லாமை பொறுத்­த­வரை அவர் 3வது முறை­யாக வெற்­றி­பெற்­றுள்­ளார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது. முன்­ன­தாக, 2010 மற்­றும் 2013ம் ஆண்­டு­க­ளில் நடால் அமெ­ரிக்க ஓபன் பட்­டத்தை கைப்­பற்­றி­யுள்­ளார்.

பட்­டம் வென்­றது குறித்து நடால் பேசும்­போது, ‘தனிப்­பட்ட முறை­யில் சொல்ல வேண்­டும் என்­றால், இந்த ஆண்­டில் கிடைத்த வெற்­றி­கள் நம்ப முடி­யா­தவை. கடந்த சில ஆண்­டு­க­ளாக காயங்­கள், சரி­யாக விளை­யா­ட­தது உட்­பட பல நெருக்­க­டி­களை சந்­தித்து, இப்­போது இந்த வெற்றி கிடைத்­துள்­ளது’ என்­றார். ஆண்­டர்­சன் பேசும்­போது, ‘நானும், நடா­லும் ஒரே வய­தில் உள்­ளோம். ஆனால், என் வாழ்­நாள் முழு­வ­தும் உங்­களை கவ­னித்து வந்­துள்­ளேன். டென்­னிஸ் என்­றால் நடால் என்று என்­னுள் அடை­யா­ள­மா­கி­விட்­டீர்­கள். இறு­திப்­போட்­டி­யில் உங்­க­ளு­ட­னான ஆட்­டம் மிக­வும் கடி­ன­மாக இருந்­தது. டென்­னி­சில் மீண்­டும் உங்­கள் திற­மையை மீண்­டும் ஒரு முறை நிரூ­பித்­துள்­ளீர்­கள்’ என்று நடாலை வாழ்த்­தி­னார்.

*பெண்­கள் இரட்­டை­யர் பிரி­வில் சுவிட்­சர்­லாந்­தின் மார்ட்­டினா ஹிங்­கிஸ், சீனா­வின் சான் யுங் ஜான் ஜோடி, செக் குடி­ய­ர­சின் லூசி ராடெக்கா, கேத்­ரீனா சினி­யா­கோவா ஜோடியை எதிர்த்து விளை­யா­டி­யது. இதில் 6–-3, 6-–2 என்ற செட் கணக்­கில் ஹிங்­ஹிஸ் ஜோடி வெற்­றி­பெற்­றது.

* 17 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான இறு­திப் போட்­டி­யில் சீனா­வின் வூ யிபிங், அர்­ஜென்­டி­னா­வின் ஆக்­செல் கெல்­லரை எதிர்த்து விளை­யா­டி­னார். இந்­தப் போட்­டி­யில் வூ யிபிங் 6-–4, 6-–4 என்ற நேர் செட்­க­ளில் வெற்­றி­பெற்று கோப்­பையை கைப்­பற்­றி­னார். இளை­யோர் பிரி­வில் சீனர் ஒரு­வர் கிராண்ட் ஸ்லாம் பட்­டத்தை கைப்­பற்­று­வது இதுவே முதல்­முறை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.