பார்­சி­லோனா கோல் மழை: மெஸ்சி ஹாட்­ரிக்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:13


ஸ்பெயி­னில் லா லிகா கோப்­பைக்­கான கால்­பந்து போட்­டி­கள் நடக்­கி­றது. பார்­சி­லோனா அணி 5-0 என்ற கோல் கணக்­கில் ஸ்பேன்­யல் அணியை வீழ்த்­தி­யது. பார்­சி­லோனா அணி­யின் நட்­சத்­திர வீரர் மெஸ்சி அபா­ர­மாக விளை­யாடி ஹாட்­ரிக் கோல் அடித்­தார். அந்த அணி­யின் சூரேஸ், ஜெராட் தலா ஒரு கோல் அடித்­த­னர்.

 ஸ்பேன்­யல் அணி கடு­மை­யாக முயற்சி செய்­தும் ஒரு கோல் கூட அடிக்க முடி­ய­வில்லை. ஆப்­சைட் மூலம் ஆட்­டத்­தின் முதல் கோலை அடித்த மெஸ்­சியை நடு­வர் கண்டு கொள்­ளா­மல் விட்­டது ரசி­கர்­க­ளி­டையே  அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. ரியல் மாட்­ரிட் அணி 1-1 என்ற கோல் கணக்­கில் லெவன்டோ அணி­யு­டன் டிரா செய்­தது. இதற்கு முன்பு நடந்த போட்­டி­யில் நடு­வ­ரு­டன் சண்டை போட்­ட­தால் சஸ்­பெண்ட் செய்­யப்­பட்ட ரொனால்டோ ரியல் மாட்­ரிட் அணிக்கு விளை­யா­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஸ்பெயி­னில் நடக்­கும் லா லிகா கோப்­பைக்­கான கால்­பந்து போட்­டி­யில் ஸ்பேன்­யல் அணிக்கு எதி­ராக ஹாட்­ரிக் அடித்த பார்­சி­லோனா வீரர் மெஸ்சி மகிழ்ச்­சி­யில் துள்ளி குதிக்­கி­றார்.