பயிற்­சி­யா­ளர் கோபி­சந்த் தொட­ரு­வார்: பேட்­மின்­டன் சங்­கம் உறுதி

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:12இந்­திய பேட்­மின்­டன் தலைமை பயிற்­சி­யா­ள­ராக கோபி­சந்த் இருக்­கி­றார். 2006ம் ஆண்டு பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட கோபி­சந்த் தொடர்ந்து இந்த பத­வி­யில் இருப்­பது குறித்து இந்­திய பேட்­மின்­டன் சங்க தலை­வர் பிஸ்வா சர்மா கூறி­ய­தா­வது:

 இந்­திய வீரர்­க­ளுக்கு கோபி­சந்த் சிறப்­பாக பயிற்சி அளித்து வரு­கி­றார். ஐத­ரா­பாத்­தில் கோபி­சந்த் அகா­ட­மி­யில் இந்­திய வீரர், வீராங்­க­னை­கள் பயிற்சி எடுத்து வரு­கின்­ற­னர். இந்­திய பேட்­மின்­டன்

சங்­கத்­திற்கு என தனி­யாக பயிற்சி மையம் அமைப்­ப­தற்கு ரூ. 50 கோடி அள­வில் செல­வா­கும். எனவே தற்­போது பயிற்சி அளிக்­கப்­பட்டு வரும் கோபி­சந்த் அகா­ட­மி­யில் தொடர்ந்து நடக்­கும். ஐத­ரா­பாத்­தில் இருந்து பயிற்சி அகா­ட­மியை வேறு இடத்­திற்கு மாற்­றும் திட்­டம் எது­வும் கிடை­யாது.

இந்­திய அணிக்கு விளை­யாடி வரும் சிந்­து­வுக்கு  சங்­கம் சார்­பில் ரூ. 10 லட்­சம், சாய்­னா­வுக்கு ரூ. 5 லட்­சம் வழங்­கப்­பட்­டது. இனி வரும் சர்­வ­தேச போட்­டி­க­ளில் இந்­திய வீரர்­கள் மேலும் சிறப்­பாக விளை­யா­டு­வார்­கள் என்­றார்.