அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: ஸ்லோனா ஸ்டீபன்ஸ் கோப்பை வென்றார்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:11


நியூ­யார்க்:

கிராண்ட் ஸ்லாம் போட்­டி­க­ளில் ஒன்­றான அமெ­ரிக்க ஓப்­பன் டென்­னிஸ் போட்­டி­கள் நியூ­யார்க்­கில் நடந்­தது. நேற்று நடந்த மக­ளிர் ஒற்­றை­யர் இறுதி போட்­டி­யில் அமெ­ரிக்­கா­வின் ஸ்லோனா ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று கோப்­பையை  கைப்­பற்­றி­னார்.

பர­ப­ரப்­பான இறுதி ஆட்­டத்­தில் அமெ­ரிக்­கா­வின் ஸ்டீபன்ஸ் 6-3, 6-0 என்ற செட் கணக்­கில் சக நாட்டு வீராங்­கனை மேடி­சன் கெய்சை வீழ்த்­தி­னார். 24 வய­தா­கும் ஸ்டீபன்ஸ் இடது காலில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக கடந்த 11 மாதங்­க­ளாக சர்­வ­தேச போட்­டி­க­ளில் விளை­யா­டா­மல் ஓய்வு எடுத்து வந்­தார்.

2013 வது ஆண்­டில் நடந்த விம்­பிள்­டன், மற்­றும் அமெ­ரிக்க ஓப்­பன் டென்­னிஸ் போட்­டி­க­ளில் 4வது சுற்று வரை சென்­றதே ஸ்டீபன்­ஸின் உச்­ச­கட்ட சாத­னை­யா­கும். இந்த போட்­டி­யில் வெற்றி பெற்ற ஸ்டீபன்­சுக்கு பரி­சாக ரூ. 23 கோடி வழங்­கப்­பட்­டது. 61 நிமி­டங்­கள் நடந்த போட்­டி­யில்  மேடி­சனை முதல் செட்­டில் போரா­டி­யும் 2வது செட்­டில் எளி­தா­க­வும் ஸ்டீபன்ஸ் வென்­றார்.

சர்­வ­தேச டென்­னிஸ் தர வரிசை பட்­டி­ய­லில் 83வது இடத்­தி­லி­ருக்­கும் ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்­றது விளை­யாட்டு ஆர்­வ­லர்­க­ளுக்கு மத்­தி­யில் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தர வரி­சை­யில் பின் தங்­கி­யி­ருந்து கோப்பை வெல்­லும் 5வது வீராங்­கனை என்ற  சாத­னையை ஸ்டீபன்ஸ் ஏற்­ப­டுத்தி உள்­ளார்.

கலப்பு இரட்­டை­யர் பிரி­வில்  சுவிட்­சர்­லாந்­தின் மார்­டினா ஹிங்­கிஸ், இங்­கி­லாந்­தின் ஜேமி மூரே ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்­கில் தைபே­யின்  ஜிஸ்­சான், நியூ­சி­லாந்­தின் மைக்­கேல் வீனஸ் ஜோடியை வீழ்த்தி சாம்­பி­யன் பட்­டம் வென்­றது.