ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு : அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் ஓய்வு

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:09


இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடை­யில் 5 ஒரு நாள் மற்­றும் 3 டி-20 கிரிக்­கெட் போட்­டி­கள் இந்­தி­யா­வில் நடக்­கி­றது.  இதன் முதல் 3 போட்­டிக்­கான இந்­திய அணியை பிசி சிஐ அறி­வித்­துள்­ளது.

சமீ­பத்­தில் இலங்­கை­யு­டன் நடந்த போட்­டி­யில் இடம் பெற்­றி­ருந்த வீரர்­க­ளில் தாக்­கூர் மட்­டும் தற்­போது இடம் பெற­வில்லை. அதே போல சுழற்­பந்து பவு­லர்­கள் அஸ்­வின், ஜடேஜா இரு­வ­ருக்­கும் மீண்­டும் ஓய்வு தரப்­பட்­டுள்­ளது. தற்­போது இங்­கி­லாந்­தில் கவுன்டி போட்­டி­க­ளில் விளை­யாடி வரும் அஸ்­வி­னுக்கு வரும் 28ம் தேதி வரை போட்­டி­கள் உள்­ளது.

 வேகப்­பந்து வீச்­சா­ளர்­கள் முக­மது சமி, உமேஷ் யாதவ் இரு­வ­ருக்­கும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய அணி­யில் இடம் பெற்று இருக்­கும் கேதர் யாதவ் கடந்த 4 போட்­டி­க­ளில் விளை­யாடி 64 ரன் மட்­டுமே எடுத்த போதும் அவ­ருக்கு மீண்­டும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய அணி தேர்வு குறித்து தேர்­வுக் குழு தலை­வர் பிர­சாத் கூறி­ய­தா­வது, இலங்­கை­யு­டன் நடந்த கிரிக்­கெட் தொட­ரில் இந்­திய வீரர்­கள் மிக­வும்  சிறப்­பாக விளை­யா­டி­னர். குறிப்­பாக அக்­சர் பட்­டேல்  சகால் இரு­வ­ரும் சிறப்­பாக விளை­யா­டி­னர். சுழற் முறை­யில் வாய்ப்பு தரும் வகை­யில் வீரர்­கள் அணி­யில் இடம் பெற்­றுள்­ள­னர்.

கோலி தலை­மை­யில் இந்­திய அணி வரும் 17ம் தேதி சென்­னை­யில் முதல் ஒரு நாள் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் மோது­கி­றது. வரும் 21ம் தேதி கோல்­கத்தா, 24ம் தேதி இந்­துõர், 28ம் தேதி பெங்­க­ளூரு, அக்­டோ­பர் 1ம் தேதி நாக்­பூர் ஆகிய இடங்­க­ளில் ஒரு நாள் போட்­டி­யில் விளை­யா­டு­கி­றது. டி-20 போட்­டி­யில் அக். 7ம தேதி ராஞ்­சி­யி­லும், 10ம் தேதி கவு­காத்­தி­யி­லும், 13ம் தேதி ஐத­ரா­பாத்­தி­லும் விளை­யா­டு­கி­றது.

இந்­திய அணி விவ­ரம்: விராட் கோலி (கேப்­டன்), ரோகித் சர்மா, சிகார் தவான், ராகுல், மணீஸ் பாண்டே, கேதர் ஜாதவ், ரகானே, தோனி, பாண்ட்யா, அக்­சர் பட்­டேல், குல்­தீப் யாதவ், சகால், பும்ரா, உமேஷ் யாதவ், முக­மது சமி.