பக்கத்து வீட்டு பெண் போல இருப்பேன்! - – பிரியா பவானி சங்கர்

06 செப்டம்பர் 2017, 12:27 AM


தமிழ் சினி­மா­விற்கு புதி­தாக வந்­துள்­ளார் பிரியா பவானி சங்­கர். டிவி­யில் தொகுப்­பா­ளினி, செய்தி வாசிப்­பா­ளர், நாடக நடிகை என பன்­மு­கம் கொண்­ட­வர்.கார்த்­திக் சுப்­பு­ராஜ் தயா­ரிப்­பில் 'மேயாத மான்' படத்­தில் நடிக்­கும் அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* சினிமா எப்­படி இருக்­கி­றது?

சினிமா மிக­வும் பிரம்­மாண்­ட­மா­னது என்ற பயமே வர­வில்லை. தொலைக்­காட்­சி­யி­லி­ருக்­கும்­போது எப்­படி படப்­பி­டிப்­புக்­குச் செல்­வேனோ, அப்­ப­டித்­தான் ‘மேயாத மான்’ படப்­பி­டிப்­புக்­கும் சென்­றேன். நாம் நாய­கி­யாகி விட்­டோம், இனி­மேல் நாம் 'ஸ்டார்' என்ற எண்­ணம் எனக்கு ஏற்­ப­ட­வில்லை. எப்­போ­துமே வேலை­யில் நேர்­மை­யாக இருப்­பேன். அதே நேர்­மை­யு­டன் படத்­தில் நடித்­தி­ருக்­கி­றேன். படம் வெளி­யா­ன­வு­டன் மக்­க­ளின் கருத்து என்­ன­வாக இருக்­கி­றது என்­பதை தெரிந்­த­வு­டன் வேண்­டு­மா­னால் நாய­கி­யாகி விட்­டோம் என்ற எண்­ணம் வர­லாம்.

* டிவி – சினிமா என்ன வித்­தி­யா­சம்?

டிவி நம்மை நேர­டி­யாக மக்­க­ளி­டையே கொண்டு போய் சேர்த்­து­வி­டும். அத­னால்­தான் சினி­மாவை விளம்­ப­ரப்­ப­டுத்­தக் கூட டிவிக்கு செல்­கி­றோம். சினி­மா­வில் தற்­போ­து­தான் அறி­மு­கம் என்­றா­லும், தொலைக்­காட்சி மூல­மாக அனை­வ­ரது வீடு­க­ளுக்­கும் ஏற்­க­னவே சென்­ற­டைந்து விட்­டேன். தொலைக்­காட்­சி­யில் என்­னைப் பார்த்­துப் பாராட்­டி­ய­வர்­கள், சினி­மா­வில் பார்த்து என்ன சொல்­லப் போகி­றார்­கள் என்­ப­தற்­காக காத்­தி­ருக்­கி­றேன். டிவி,- சினிமா என அனைத்­துமே வேலை­தான். அதற்­கான வர­வேற்பு என்ன என்­பது விரை­வில் தெரி­யும்.

* இன்­ஜி­னி­ய­ரிங் படித்­து­விட்டு மீடி­யா­விற்கு வந்­தது ஏன்?

இன்­ஜி­னி­ய­ரிங் வேலையை விட்டு, மீடி­யா­வுக்­குள் வரு­வதை பேஷ­னாக நினைக்­கி­றார்­கள். நான் அப்­படி நினைக்­க­வில்லை. பொறி­யா­ளர் வேலை­யைப் பிடித்­துச் செய்­ப­வர்­கள், குடும்­பச் சூழ­லால் பணி­பு­ரி­ப­வர்­கள், என்ன பண்­ணு­கி­றோம் என தெரி­யா­மல் பணி­பு­ரி­ப­வர்­கள் உள்­ளிட்ட பல­ரைப் பார்த்­தி­ருக்­கி­றேன். சினிமா ஒரு பெரிய துறை­யைப் போல, ஐ.டியும் ஒரு பெரிய துறை. எனக்கு இன்­ஜி­னி­ய­ரிங் வேலை பிடிக்­க­வில்லை, விட்டு விட்­டேன். கல்­லுா­ரி­யில் படிக்­கும்­போதே எனக்கு மீடியா மீது ஒரு ஈர்ப்பு இருந்­தது. பகுதி நேர­மாக செய்து வந்­ததை, முழு நேர­மா­கச் செய்து பார்க்­க­லாம் என்று இதற்­குள் வந்­தேன்.

* நீங்­கள் ஹீரோ­யின் ஆனது பற்றி என் சொல்­கி­றார்­கள் நண்­பர்­கள்?

நண்­பர்­க­ளுக்­குக் கலாய்ப்­பதே வேலை. படம் வெளி­யாகி என்ன விமர்­ச­னம் வரும் என்­ப­தைத் தாண்டி நண்­பர்­கள் வாயி­லி­ருந்து வரும் கருத்­து­க­ளி­லி­ருந்து எப்­ப­டித் தப்­பிப்­பது என்று தெரி­ய­வில்லை. ஏனென்­றால், சமூக வலைத்­த­ளத்­தில் ஒரு புகைப்­ப­டத்தை போட்­டாலே, கலாய்க்­கத் தொடங்கி விடு­வார்­கள். 10 பேர் பார்ப்­பார்­கள், தய­வு­செய்து கொஞ்­சம் குறை­வா­கக் கிண்­டல் செய்­யுங்­கள் என்­றால் கூடக் கேட்க மாட்­டார்­கள். அவர்­க­ளைப் பொறுத்­த­வரை கல்­லுா­ரித் தோழி­யா­கத்­தான் இப்­போ­தும் பார்க்­கி­றார்­கள். மக்­கள் நம் தோழியை என்ன சொல்­லப் போகி­றார்­கள் என்­பதை அறிந்­து­கொள்­ளும் ஆர்­வத்­தில் அவர்­க­ளும் இருக்­கி­றார்­கள்.

* 'மேயாத மான்' படத்­தில் கேரக்­டர்?

பக்­கத்து வீட்­டுப் பெண் போல இருப்­பேன். வானத்­தி­லி­ருந்து இறங்கி வந்த காதல் தேவ­தை­யைப் போல நடிக்­க­வில்லை. சாதா­ர­ண­மான கல்­லுா­ரிப் பெண் வேடத்­தில் நடித்­துள்­ளேன். என்­னு­டைய நடை­முறை வாழ்க்­கை­யில் எப்­ப­டி­யி­ருக்­கி­றேனோ, அப்­ப­டித்­தான் படத்­தி­லும் இருப்­பேன்.

* யார் ரோல் மாடல்?

‘பூ’ பார்­வதி மேனன் நடிப்பு ரொம்ப பிடிக்­கும். அவர் ஒரு திற­மை­யான நடிகை. எப்­படி இவ­ருக்கு மட்­டும் இந்த மாதிரி கதை­கள் அமை­கின்­றன என்று யோசித்­தி­ருக்­கி­றேன். அதே வேளை­யில், ரொம்ப சிரத்தை எடுத்­துக்­கொள்­ளா­மல் யதார்த்­த­மாக நடிக்­கும் மாத­வன் சாரோடு ஒரு படத்­தி­லா­வது நடித்­து­விட வேண்­டும் என்­பது ஆசை.