பெண் தோற்றம் சவாலானது! -– கதிர்

29 ஆகஸ்ட் 2017, 10:16 PM

‘விக்­ரம் வேதா’ படத்­தில் 'புள்ளி' என்ற கேரக்­ட­ரில் கலக்கி இருந்­தார் கதிர். தற்­போது 'சிகை' படத்­தின் மூலம் பல­ரது கவ­னத்­தை­யும் பெற்­றுள்­ளார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* அதிக படங்­க­ளில் நடிக்க ஒப்பு கொள்­வ­தில்­லையா?

நிறைய படங்­க­ளில் நடித்து முகத்தை பதிவு செய்­வது என்­பது ஒரு வகை. படங்­கள் குறை­வாக நடித்­தா­லும், அதில் நமது திற­மையை நிரூ­பிப்­பது இன்­னொரு வகை. இரண்­டி­லுமே பய­ணிக்க ஆசை­தான். ஒவ்­வொரு படத்­தை­யும் மக்­கள் அணு­கும் முறை­யும் மாறி­யுள்­ளது. அதற்கு தகுந்­தாற்­போல நடந்­து­கொள்ள நினைக்­கி­றேன். நான் போகும் பாதை சரி­யா­ன­து­தானா என்று எனக்கு சொல்­லத் தெரி­ய­வில்லை. ஆனால், இந்த பாதை­யில் தவறு செய்­து­வி­டக் கூடாது என்­ப­தில் மட்­டும் கவ­ன­மாக இருக்­கி­றேன்.

* 'சிகை' எந்த மாதி­ரி­யான படம்?

‘சிகை’ ஒரு புதிய முயற்சி. உடனே மெது­வாக நக­ரும் கதையோ என எண்­ணி­விட வேண்­டாம். கிரைம் த்ரில்­லர் பாணி­யில் நக­ரும் கதை­யில் கேரக்­டர்­கள் அனைத்­துமே புது­மை­யாக இருக்­கும். நாய­கன், நாயகி, காதல், வில்­லன் என வழக்­க­மான எது­வுமே இப்­ப­டத்­தில் இருக்­காது. கதை­யைக் கேட்­கும்­போது எப்­படி உணர்ந்­தேனோ, அதையே படத்­தைப் பார்ப்­ப­வர்­க­ளும் உணர்­வார்­கள். திரைப்­பட விழாக்­க­ளில் இந்த படத்­தைப் பார்த்­த­வர்­கள் மிக­வும் பாராட்­டி­னார்­கள். ஆனால், இது திரைப்­பட விழா­வுக்­கான பட­மும் கிடை­யாது, கமர்­ஷி­யல் பட­மும் கிடை­யாது. இதன் கதைக்­க­ளத்­துக்­காக மட்­டுமே திரைப்­பட விழாக்­க­ளில் திரை­யி­டத் தேர்­வா­னது.


* திரு­நங்­கை­யாக நடித்­துள்­ளீர்­களா?

படத்­தில் எனக்கு இரண்டு தோற்­றங்­கள் இருக்­கின்­றன. திரு­நங்கை மட்­டும் என்று சொல்­லி­விட முடி­யாது. மேலும், அதை பற்றி விலா­வ­ரி­யா­கப் பேச­வும் முடி­யாது. ஏனென்­றால், அது­தான் படத்­தின் சஸ்­பென்ஸ். இப்­ப­டத்­தின் டிரெய்­லர் திருப்தி வரும் வரை ஐந்து முறை தயார் செய்­தோம். முத­லில் எதை வெளி­யி­ட­லாம், எதை வெளி­யிட வேண்­டாம் என்ற குழப்­பம் எங்­க­ளுக்கே இருந்­தது. அதை நீங்­கள் படம் பார்க்­கும்­போது உணர்­வீர்­கள்.

* பெண் தோற்­றத்­திற்­கான பயிற்சி ஏதா­வது எடுத்­தீர்­களா?

உண்­மை­யில் மிக­வும் கடி­ன­மாக இருந்­தது. மேக்- – அப் போட்டு நடித்­தால், வேறு மாதிரி தெரி­யும் என்று நினைத்­தோம். எனவே, பெண்­க­ளுக்கு மெழுகு தோய்த்த நுாலைக் கொண்டு இமை முடி­க­ளைப் பிடுங்கி எடுப்­ப­து­போல எனது தாடியை ஒவ்­வொரு முடி­யாக ஆறரை மணி நேரம் பிடுங்கி எடுத்­தார்­கள். அப்­போது மிக­வும் வலித்­தது. அதைத் தொடர்ந்து கன்­னம் கொஞ்­சம் வீங்­கி­யது. உடனே படப்­பி­டிப்பு தொடங்கி விட்­டோம். ஆகை­யால் மிக­வும் குறைந்த மேக் – -அப் தேவைப்­பட்­டது. மேக் – -அப்பை எல்­லாம் தாண்டி நடிப்­பாக எந்­த­வொரு இடத்­தி­லும் ஓவ­ராக நடித்­து­வி­டக் கூடாது என்­ப­தி­லும் தெளி­வாக இருந்­தேன். ஆண் -– பெண் இரு­வ­ருக்­குமே உருவ வித்­தி­யா­சம் என்று ஒன்­றுள்­ளது. அதைத் தாண்டி செய்­கை­க­ளில் சுமார் 20 சத­வீ­தம் மட்­டுமே வித்­தி­யா­சம் இருக்­கும். பெரிய வித்­தி­யா­சங்­கள் கிடை­யாது.