இறுதி போட்டியில் வெள்ளியுடன் வெளியேறினார் சிந்து

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2017 09:26கிளாஸ்கோ: 

உலக பேட்மின்டன் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியாவின் சிந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் தோல்வியுற்றார். இதன் இறுதி போட்டியில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் போராடி ஜப்பானின் நோசோமியிடம் தோல்வியுற்றார். முதல் செட்டை இழந்த சிந்து 2வது செட்டில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார். கோப்பையை நிர்ணயம் செய்யும் 3வது செட்டில் சிந்து போராடி தோல்வியுற்று வெள்ளியுடன் வெளியேறினார்.

இதற்கு முன்பு நடந்த அரை இறுதி போட்டியில் சிந்து 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் சென் யூபியை வீழ்த்தினார். உலகின் 10வது நிலை வீராங்கனையான சென் யூபியை 2 செட்களிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சிந்து வெற்றி பெற்றார். 2012, 14ம் ஆண்டுகளில் சிந்து இந்த போட்டியில் வெண்கலம் வென்றார். 3வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை சிந்து ஏற்படுத்தினார். இதற்கு முன்பு சாய்னா 3 முறை இறுதி போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.