ராமையன்பட்டியில் தானிய சேமிப்புப்பயிற்சி

பதிவு செய்த நாள்

10
பிப்ரவரி 2016
22:48

 மாநில வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு தானிய சேமிப்புப்பயிற்சி நடந்தது. நெல், பயறு வகைகளுக்கு அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள், தானியங்களை சேமிக்கும் முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (விளம்பரம் மற்றும் பிரசாரம்) பயிற்சி அளித்தார். விளைபொருள் குழுக்கள் குறித்து வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) ஏஞ்சலின் பொன்ராணி விளக்கினார்.

 விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறுவது குறித்து ஏற்றுமதியாளர் சந்திரசேகர் பேசினார். ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பாளர் கண்ணன் பேசினார். குளிர்பதனக் கிட்டங்கிகள், உலர்களங்கள், இடைத்தரகர் இன்றி அதிக லாபம் பெறுதல் குறித்து விற்பனைக்குழு செயலாளர் விஜயகுமார் பேசினார்.

வேளாண்மை உதவி அலுவலர் செந்தில் நன்றி கூறினார்.