உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம்

பதிவு செய்த நாள் : 24 ஆகஸ்ட் 2017 10:28


கிளாஸ்கோ : 

உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் ஸ்காட்­லாண்­டில் உள்ள கிளாஸ்கோ நக­ரில் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்­றுப் போட்­டி­யில் முன்­னே­றிய நிலை­யில், மற்ற இந்­திய வீரர்­கள் தங்­க­ளது தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளில் ஆப­ர­மாக விளை­யா­டி­னர்.

* இந்­தி­யா­வின் நட்­சத்­திர வீராங்­க­னை­யான சிந்து தான் பங்­கேற்ற 2ம் சுற்று ஆட்­டத்­தில், தென் கொரி­யா­வின் கிம் யோ மின்னை எதிர்­கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சிந்து மிக எளி­தாக 21-16, 21-14 என்ற நேர் செட்­க­ளில் வெற்றி பெற்­றார்.

* இந்­தி­யா­வின் சாய் பிர­னீத் நேற்­றைய ஆட்­டத்­தில், இந்­தோ­னே­ஷி­யா­வின் அந்­தோனி சினி­சு­காவை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யின் முதல் சுற்று ஆட்­டத்தை சினி­சுகா 21-14 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கைப்­பற்­றி­னார். சுதா­ரித்­துக் கொண்ட சாய் பிர­னீத் தன் முழு பலத்தை களத்­தில் இறக்கி விளை­யா­டி­னார். 2ம் சுற்று ஆட்­டத்தை 18-21 என்ற புள்­ளி­க­ளி­லும், 3ம் சுற்று ஆட்­டத்தை 19-21 புள்­ளி­க­ளி­லும் கைப்­பற்றி, சாய் பிர­னீத் வெற்­றி­பெற்­றார். அவர் நேற்­றைய போட்­டி­யில் 21-14, 18-21, மற்­றும் 19-21 என்ற புள்­ளி­க­ளில் வெற்றி பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

* பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் சாய்னா நேவால், சுவிட்­சர்­லாந்­தின் சப­ரினா ஜாக்­வெய்டை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சாய்னா 21-11, 21-12 என்ற நேர் செட்­க­ளில் சப­ரி­னாவை தோற்­க­டித்து, அடுத்த சுற்று ஆட்­டத்­துக்கு முன்­னே­றி­னார்.

* இந்­தி­யா­வின் அஜய் ஜெய­ராம், ஆஸ்­தி­ரியா நாட்­டின் லுகா ராபெரை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் அஜய்­ஜெ­ய­ராம் 21-14, 21-12 என்ற நேர் செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார்.

* இந்­தி­யா­வில் இருந்து இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்ற கலப்பு இரட்­டை­யர் ஆட்­டக்­கா­ரர்­க­ளில் பிர­வின் சோப்ரா, சிக்­கி­ரெட்டி ஜோடி மட்­டுமே தாக்­குப் பிடித்­துள்­ளது. இந்­திய - மலே­சிய ஜோடி­யான பிர­ஜக்தா சவந்த், யோகிந்­தி­ரன் கிருஷ்­ணனை எதிர் கொண்டு விளை­யா­டி­யது. இந்­தப் போட்­டி­யில் 21-12, 21-19 என்ற நேர் செட்­க­ளில் சிக்­கி­ரெட்டி ஜோடி வெற்­றி­பெற்­றது.