இப்போதைக்கு ஆக்டிங்! – அக் ஷாரஹாசன்

22 ஆகஸ்ட் 2017, 11:11 PM

‘விவே­கம்’ மூலம் தமிழ் சினி­மா­வுக்கு நடி­கை­யாக அறி­மு­க­மா­கி­றார் அக் ஷரா­ஹா­சன். அவரை சந்­தித்த போது..

* மும்பை பொண்­ணா­கவே இருக்கீங் களே?

சென்­னை­யில்­தான் பிறந்­தேன். இங்­க­தான் படிச்­சேன். அப்­பு­றம்­தான் பெங்­க­ளூரு. படிப்பை பாதி­யிலே நிறுத்­திட்டு டான்ஸ் கத்­துக்க போயிட்­டேன். பக்கா தமிழ் பொண்­ணு­தான். அம்­மா­வுக்கு துணையா மும்­பை­யிலே இருக்­கேன். என் கேரி­ய­ருக்­கும் மும்பை சரி­யாக இருக்­கும் என்­ப­தால் அங்கு இருக்­கி­றேன்.

* 'பார்ன் இன் சில்­வர் ஸ்பூ'னா இருந்­தா­லும் வெயில், மழை­யிலே கேம­ராவை துாக்­கிக்­கிட்டு அலை­யு­றீங்க...?

வச­தி­யான குடும்­பத்­தில் பிறந்­தா­லும், நீ வீட்­டி­லேயே இருந்­தால் உல­கத்தை கத்­துக்க முடி­யாது, கஷ்­டப்­பட்டு எல்லா விஷ­யத்­தை­யும் புரிஞ்­சுக்­க­ணும்னா வெயி­லும், மழை­யும் உனக்கு நெருக்­கமா இருக்­க­ணும்னு அப்பா சொல்லி சொல்லி வளர்த்­தாங்க. நான் அப்பா மாதிரி. அவர் நடிக்க வர்­ற­துக்கு முன்­னாடி நட­னக் கலை­ஞரா, உதவி இயக்­கு­நரா இருந்து எல்லா டெக்­னிக்­கு­க­ளை­யும் கத்­துக்­கிட்­டுத்­தான் நடி­கர் ஆனார். நானும் அப்­ப­டித்­தான் நட­னம் கற்­றேன். உதவி இயக்­கு­நரா வேலை பார்த்­தேன். இப்போ நடிகை ஆகி­யி­ருக்­கேன்.

* ‘கடல்’ படத்­தில் நடிக்க மணி­ரத்­னம் கேட்­ட­போது மறுத்­தீங்­களே?

 நாட­றிஞ்ச டைரக்­டரா இருந்­தா­லும் எனக்கு அவரு அக்கா புரு­ஷ­னும்­கூட. அவர் கேட்டு யாரா­வது மறுப்­பாங்­களா? அப்போ சிங்­கப்­பூ­ரில் வெஸ்­டர்ன் டான்ஸ் கிளாஸ்ல சேர்ந்­தி­ருந்­தேன். அதை டிஸ்­கன்­டி­னியூ பண்ண முடி­யலே.

* இந்­தி­யில் நடி­கையா நீங்க சக்­சஸ் ஆயிட்­டீங்­களா?

நான் நடிச்ச ‘ஷமி­தாப்’ வெற்­றிப்­ப­டம்­தான். அதுக்­கப்­பு­ற­மும் ஒரு படம்  பண்­ணேன். ஆனா, அப்போ என் கவ­னம் முழுக்க டைரக் ஷனில்­தான் இருந்­தது. இப்போ ஆக்­டிங்­கில் கான்­சன்ட்­ரேட் பண்­றேன்.

* 'விவே­கம்?'

வெளி­நாட்­டில் பிறந்து வளர்ந்தஇந்­தி­யப் பொண்ணு. என்­னோட வய­லட் கண்­ணும், ஹேர்ஸ்­டை­லும்­தான் இந்த கேரக்­ட­ரில் நான் நடிக்க கார­ணம். ஹாலி­வுட் ஹீரோ­யின் ரேஞ்­சுக்கு என்னை ஆக் ஷன் பண்ண வெச்­சி­ருக்­காரு டைரக்­டர் சிவா. அஜீத் சாருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி கேரக்­டர். ரிலீஸ் வரைக்­கும் இதைப் பத்தி ரொம்ப பேச­வே­ணாம்னு சொல்­லி­யி­ருக்­காங்க. சாரி. அவ்­ளோ­தான்.

* அஜீத் சமைச்ச பிரி­யாணி சாப்­பிட்­டீங்­களா?

ஷூட்­டிங் நடந்­த­தெல்­லாம் பனிப்­பி­ர­தே­சத்­தில். அங்கே அடுப்­பு­கூட பத்­த­வைக்க முடி­யாது. அத­னாலே அஜீத் சாரோட பேமஸ் பிரி­யா­ணியை டேஸ்ட் பண்ண முடி­யலே. சீக்­கி­ரமே வீட்­டுக்கு கூப்­பிட்டு சமைச்சு போடு­வா­ருன்னு நினைக்­கி­றேன். பிரி­யாணி சமைக்க கத்­துக்­க­ற­தை­விட அவர்­கிட்டே இருக்­கிற எளி­மை­யை­யும், மரி­யா­தை­யை­யும்­தான் கத்­துக்க விரும்­பு­றேன்.

* அக்­கா­வுக்கு போட்­டியா?

ஸ்ருதி­யோட ரூட்டு வேற, என்­னோட ரூட்டு வேற. ஸ்ருதி­யோட உய­ரத்­துக்கு வள­ர­ணும்னா நான் இன்­னும் ரொம்­ப­வும் உழைக்­க­ணும். நிறைய டிரா­வல் பண்­ண­ணும்.

* டைரக் ஷன் எப்­போது?

சில பிளான்ஸ் இருக்கு. ஆனா எதை­யும் எப்­போன்னு டேட் பிக்ஸ் பண்­ணிக்­கலே. முதல் படமே செம ஹிட்­ட­டிக்­க­ணும். அப்­பு­றம், அப்­பாவை டைரக்ட் பண்­ண­ணும். பெரி­யப்பா சாரு­ஹா­சன், அப்பா, அம்மா, அக்­காக்­கள் சுஹா­சினி, அனு­ஹா­சன், ஸ்ருதி­ஹா­சன்னு இப்­படி எங்க பேமிலி மெம்­பர்­ஸை­யெல்­லாம் நடிக்க வச்சு ஒரு படம் இயக்­க­ணும்னு கனவு இருக்கு.

* புத்த மதத்­துக்கு மாறிட்­டீங்­களே?

எனக்­கும் அப்பா மாதிரி கட­வுள் நம்­பிக்கை கிடை­யாது. ஆனால் புத்த மத வழி­பா­டும், வாழ்­வி­ய­லும் பிடிக்­கும். அத­னால் அந்த வழி­பாட்­டை­யும், வாழ்­வி­ய­லை­யும் கடைப்­பி­டிக்­கி­றேன். ஆனால் புத்த மதத்­துக்கு மாற­வில்லை.

* அப்பா அர­சி­ய­லுக்கு வரு­வாரா?

அவர் எப்­போ­தும் நாட்டு நடப்பை விமர்­சிப்­பார், அதைத்­தான் இப்­போ­தும் செய்­கி­றார். இப்­போது ஊட­கங்­கள் பெருகி விட்­ட­தால் அது பெரி­து­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக நினைக்­கி­றேன். அவர் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டும், வேண்­டாம் என்று என் கருத்தை சொல்ல மாட்­டேன். அவர் முடி­வெ­டுக்­கட்­டும். அதன் பிறகு என் கருத்தை சொல்­கி­றேன்.