அவர் சிரித்தது சஸ்பென்ஸ்! – ஜிப்ரான்

22 ஆகஸ்ட் 2017, 10:19 PM

இசை­ய­மைப்­பா­ளர் ஜிப்­ரான்! ‘உத்­தம வில்­லன்’, ‘பாப­நா­சம்’, ‘தூங்­கா­வ­னம்’ என்று கமல்­ஹா­சன் படங்­க­ளில் ஹாட்­ரிக் அடித்­தி­ருப்­ப­வர். அடுத்து ‘விஸ்­வ­ரூ­பம்- 2’ படத்­துக்­கும் இசை­ய­மைத்­தி­ருக்­கி­றார். இசை­ய­மைப்­பா­ளர்­கள் ஹீரோ ஆகும் காலம் இது. ஜிப்­ரானோ ‘சென்னை 2 சிங்­கப்­பூர்’ படத்­தின் மூலம் தயா­ரிப்­பா­ளர் ஆகி­றார். ஜிப்­ரானை அவ­ரது ரிக்­கார்­டிங் தியேட்­ட­ரில் சந்­தித்­த­போது...

* படம் தயா­ரிக்­கும் எண்­ணம் எப்­படி?

 இந்த படத்தை பொறுத்­த­வரை நான் முத­லில் மியூ­சிக் டைரக்­டர்­தான். கே. ஆனந்­தன் என்­ப­வர்­தான் அதி­கா­ர­பூர்­வ­மான தயா­ரிப்­பா­ளர். இந்த படத்­தோட டைரக்­டர் அப்­பாஸ் அக்­பர் என்­னோட நீண்­ட­கால நண்­பர். சிங்­கப்­பூ­ரில் படிக்­கி­றப்போ எனக்கு பரிச்­ச­ய­மா­ன­வர். அவ­ரோட நட்­புக்­கா­கத்­தான் இந்த படத்­திலே நான் கமிட் ஆனதே.

ஒரு கட்­டத்­தில் சூழல் கார­ணமா நானும் இந்த படத்­தோட தயா­ரிப்­பா­ளரா ஆக வேண்­டி­ய­தா­யி­டுச்சு. கிட்­டத்­தட்ட ஆறு வரு­ஷம் இந்த கதையை சுமந்­துக்­கிட்டு அலைஞ்­சாரு எங்க இயக்­கு­நர் அப்­பாஸ். அவரு எப்­ப­டி­யெல்­லாம் கஷ்­டப்­பட்­டார் என்­பதை அவரை கேட்டு தெரிஞ்­சுக்­குங்க.

* 'சென்னை 2 சிங்­கப்­பூர்' படத்தின்  கதை?

சென்­னை­யி­லி­ருந்து வேலை தேடி சிங்­கப்­பூர் செல்­லும் இளை­ஞன் அங்கு எப்­ப­டி­யெல்­லாம் கஷ்­டப்­ப­டு­கி­றான் என்­ப­து­தான் படத்­தோட ஒரு வரிக்­கதை. அதை சீரி­ய­ஸாக சொல்­லா­மல் ஜாலி­யாக சொல்­லி­யி­ருக்­கி­றோம். பாண்­டி­ய­ரா­ஜன் சார் நடித்த ‘கதா­நா­ய­கன்’ படம் போல் விறு­வி­றுப்­பா­க­வும் காமெ­டி­யா­க­வும் கதை நக­ரும். முக்­கால்­வாசி படப்­பி­டிப்பை சிங்­கப்­பூ­ரில் நடத்­தி­னோம். இதில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரி­யன், ராஜேஷ் பால­சந்­தி­ரன், சிவ­கே­ஷவ், ‘கவிதை குண்­டர்’ எம்.சி. ஜாஸ் உட்­பட ஏரா­ள­மான புது­மு­கங்­கள் நடித்­தி­ருக்­கி­றார்­கள். அனை­வ­ருக்­கும் ஆறு மாதங்­கள் நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்­தோம்.

* படத்தை வித்­தி­யா­ச­மாக புரொ­மோ­ஷன் செய்­தி­ருக்­கி­றீர்­க­ளாமே?

குடும்­பத்­து­டன் பார்த்து ரசிக்­கும்­ப­டி­யாக படம் வந்­துள்­ளது. இந்த படத்தை இன்­டர்­நே­ஷ­னல் லெவ­லில் விளம்­ப­ரப் படுத்­தி­யி­ருக்­கி­றோம். சென்­னை­யில் இருந்து மியான்­மர், தாய்­லாந்து, மலே­ஷியா வழி­யாக காரி­லேயே சிங்­கப்­பூ­ருக்கு சென்­றோம். கிட்­டத்­தட்ட காரி­லேயே இரண்டு மாதம் டிரா­வல் பண்­ணி­னோம். விசா போன்ற நடை­மு­றைச் சிக்­கல்­கள் ஒரு பக்­கம் இருந்­தா­லும், காருக்­குள்­ளேயே பல மணி நேரம் டிரா­வல் பண்­ணி­ய­தால் கால்­கள் வீக்­கம் அடைந்­தது. ஜீர­ணக் கோளாறு உட்­பட பல உடல் உபா­தை­கள் ஏற்­பட்­டது. பல பிரச்­னை­களை கடந்­து­தான் இந்த படத்தை சிறப்­பாக முடிக்க முடிந்­தது.

* தொடர்ந்து தயா­ரிப்­பீர்­களா?

என்­னு­டைய முழு ஆர்­வ­மும் இசை­யில்­தான் இருக்­கி­றது. நடிப்­பதை பற்­றி­யும், படம் தயா­ரிப்­பதை பற்­றி­யும் யோசித்­த­தில்லை. ஏற்­க­னவே சொன்ன மாதிரி சூழ்­நிலை கார­ண­மா­கத்­தான் நானும் இந்த படத்­தின் தயா­ரிப்­பா­ள­ராக மாறி­னேன்.

* பாடல்­கள் எப்­படி?

ரசி­கர்­க­ளின் கவ­னம் ஈர்க்­கும் வகை­யில் வந்­துள்­ளது. ஒரு பாடலை வேக­மா­கப் பாட வேண்­டும். யாரை பாட வைக்­க­லாம் என்று யோசித்த போது ஆர்.ஜே. பாலாஜி நினை­வுக்கு வந்­தார். அவ­ரும் ஏதோ டூயட் பாட­லாக இருக்­கும் என்ற ஆர்­வத்­தில் உடனே ஸ்டூடி­யோ­வுக்கு வந்­தார். பாடல் வரியை பார்த்­த­தும் கொஞ்­சம் ஜெர்க்­காகி, அப்­பு­றம் பாடிக் கொடுத்­தார்.

* கமல்­ஹா­சன் என்ன சொன்­னார்?

சமீ­பத்­தில் படத்­தின் டிரெய்­லரை கமல் சாருக்கு காண்­பித்த போது அடக்க முடி­யா­மல் சிரித்­தார். அவர் ஏன் அப்­படி சிரித்­தார் என்­பது சஸ்­பென்ஸ். ஏன்னா, கதை அப்­படி. நீங்­க­ளும் படம் பார்த்­து­விட்டு சிரிப்­பீர்­கள் என்று நம்­பு­கி­றோம்.