சின்சினாட்டி :
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் இப்போது அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முன்னதாக நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திரமும், நம்பர் ஒன் வீரரருமான ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் நிக் கிரிஜியோசுடன் மோதினார். இந்தப் போட்டியில் நிக் கிரிஜியோஸ் 6--2, 7--5 என்ற நேர் செட்களில் நடாலை தோற்கடித்து, அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பெரர், ஆஸ்திரியாவின் டொமினிக் பெரரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் பெரர் 6--3, 6--3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் பெரர், நிக் கிரிஜியோஸ் மோதுகின்றனர்.
பெண்கள் காலிறுதிப் போட்டியில் செக் நாட்டின் கரோலினா பிளிஸ்கோவா, டென்மார்க் நாட்டின் கரோலின் வோஸ்னியாக்கியை எதிர்த்து விளையாடினார். இதில் பிளிஸ்கோவா 6--2, 6--4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசா, ரஷ்யாவின் ஸ்விட்லானா கஸ்னட்கோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் 6--2, 5--7, 7--5 என்ற செட்களில் முகுருசா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் முகுருசா, கரோலினா பிளிஸ்கோவா மோதுகின்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா, சீனாவில் பெங் ஜோடி, தைவான் நாட்டின் ஹெய் சூ வெய், ரோம் நாட்டின் மோனிகா நிக்லெஸ்க் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சூவெய், மோனிகா ஜோடி 6--4, 7--6 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.