ஹாக்கி : ஆஸ்திரியாவை வீழ்த்திய இந்தியா

பதிவு செய்த நாள் : 18 ஆகஸ்ட் 2017 09:45


ஆம்ஸ்டர்டாம் :

 இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தலைமையில் ஐரோப்-பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்-டுள்ளது.

பெல்ஜியத்துடன் நடை--பெற்ற 2 போட்டிகளில் இந்தியா வெற்றியை பறி கொடுத்தது. நெர்லாந்துடன் நடைபெற்ற 2 ஆட்டங்களை இந்தியா கைப்பற்றியது. இறுதியாக, ஆஸ்திரியா-வுடனான ஒரு போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடை--பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரி-யாவை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்று கைப்பற்றியுள்ளது.

முன்னதாக ஆட்டத்தின் முதல் கால் பகுதியின் இறுதியில் ஆஸ்திரியாவின் வீரர்கள் கோல் அடித்து 0-1 என்ற முன்னிலையில் இருந்-தனர். இதனால், இந்தியா-வுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்திய வீரர் ஆட்டத்தின் 2ம் கால் பகுதியில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து இந்திய அணியை 2-1 என்று முன்னிலைப்படுத்தினார். 3வது கோலை மன்தீப்சிங் விளாசி, 3-1 என்று இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கிடையே ஆஸ்திரியா அணி தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி, 3-2 என்று கோல் கணக்கை உயர்த்தியது. ஆஸ்திரியா வீரர்கள் 3வது கோலை வெற்றிகரமாக்கி, கோல் எண்ணிக்கையை 3-3 என்று சம நிலையில் கொண்டு வந்தனர். இதனால், ஆட்டத்தின் 4ம் கால் பகுதி பரபரப்பாக இருந்தது. ஆட்டம் முடிவதற்கு  சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்திய அணியின் சிங்லென்சனா ஒரு அபார கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.