ரோஜர்ஸ் கோப்பை: போபண்ணா ஜோடி ஏமாற்றம்

பதிவு செய்த நாள் : 15 ஆகஸ்ட் 2017 03:28

மான்ட்ரியல்,  

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றியது.


கனடாவின் மான்ட்ரியல் நகரில், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரான்சின் ஹெர்பர்ட், நிகோலஸ் மகுட் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 4 - 6 என இழந்த போபண்ணா ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6 - 3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கர் ற்றில் ஏமாற்றிய இந்திய ஜோடி 6&10 எனக் கோட்டைவிட்டது. முடிவில் போபண்ணா ஜோடி 4 - 6, 6 - 3, 6 - 10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

பெடரர் தோல்வி: ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் மோதினர். இதில் பெடரர் 3&6, 4 - 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஸ்வேரேவ் கோப்பை வென்றார்.