ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

பதிவு செய்த நாள் : 15 ஆகஸ்ட் 2017 03:24

வால்விஜ்க், 

நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4 - 3 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்துள்ள மன்பிரீத் சிங் தலைமையிலான இளம் இந்திய ஹாக்கி அணி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது. சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்த பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது

இந்நிலையில் நெதர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, வால்விஜ்க் நகரில் நடந்த முதல் போட்டியில் உலகின் நம்பர்-4 நெதர்லாந்தை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய உலகின் நம்பர் 6 இந்திய அணி 4 - 3 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு கேப்டன் மன்பிரீத் சிங் (30, 44வது நிமிடம்), வருண் குமார் (17வது), ஹர்ஜீத் சிங் (49வது) கோலடித்து கைகொடுத்தனர். நெதர்லாந்து அணிக்கு பாப் டி வோக்ட் (49, 59வது நிமிடம்), மின்க் வான் டெர் வீர்டன் (5வது) ஆறுதல் தந்தனர்.