என் குடும்பத்தினர் கொடுத்திருக்கும் பரிசு! –- பிரியா ஆனந்த்

15 ஆகஸ்ட் 2017, 02:11 AM''‘கூட்­டத்­தில் ஒருத்­தன்’ நல்ல படம் என்று மீடி­யாக்­கள் புகழ்ந்­தார்­கள். படம் பார்த்த என் தோழி­க­ளும் பாராட்­டி­னார்­கள். ஆனா­லும், படம் எதிர்­பார்த்த இடத்தை ரீச்­சா­க­வில்லை. அது ஏன் என்று தெரி­ய­வில்லை'' என்று ஆதங்­கத்­தோடு பேசத் தொடங்­கி­னார் பிரியா ஆனந்த். மேலும் அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* நடிக்­கும் படங்­களை குறைத்­துக் கொண்டு விட்­டீர்­களா?

ஒவ்­வொரு படத்­தில் நடிக்­கும் போதும், ஒவ்­வொரு விஷ­யத்­தைக் கற்­றுக்­கொண்டே இருந்­தேன். எனக்கு வந்த கதை­க­ளில் எது சிறந்­ததோ, அதையே தேர்வு செய்து நடித்­தேன். நான் திட்­ட­மிட்­டது வேறு, நடந்­தது வேறு. அவை என் கையில் இல்­லையே? படப்­பி­டிப்­புக்கு குடும்ப உறுப்­பி­னர்­கள் இல்­லா­மல் நான் மட்­டுமே போவேன். ஆகை­யால், படக்­கு­ழு­வி­னர் எப்­படி இருப்­பார்­கள் என்­ப­தை­யும் பார்த்­துக் கொள்­வேன். நாய­க­னு­டைய பெயரை மட்­டும் வைத்­துப் படங்­களை ஒத்­துக் கொள்­வ­தில்லை. சரி­யாக போகாத படங்­கள், கடி­ன­மான தரு­ணங்­கள் உள்­ளிட்ட பல விஷ­யங்­களை தாண்­டியே இந்த அள­வுக்கு வளர்ந்­துள்­ளேன். திரை­யு­ல­கில் சில விஷ­யங்­களை இன்­னும் சரி­யாக கையாண்­டி­ருக்­க­லாம். ஆனால், அதே விஷ­யங்­கள் மறு­ப­டி­யும் நடக்­கும் போது சரி­யாக கையாள்­வேன். நிறைய தவ­று­கள் மூல­மா­கவே நிறைய கற்­றுக்­கொள்ள முடி­யும்.

* இப்­போ­து­தான் மலை­யா­ளம், கன்­னட படங்­க­ளில் எண்ட்­ரி­யாகி உள்­ளீர்­களே, ஏன்?

நிறைய தமிழ் படங்­க­ளில் ஹீரோ­விற்கு உத்­வே­கம் அளிக்­கக்­கூ­டிய கதா­பாத்­தி­ர­மா­கத்­தான் நாயகி இருப்­பாள். அப்­ப­டியே நிறைய படங்­க­ளில் நடித்து விட்­ட­தால் கொஞ்­சம் போர­டிக்­கத் தொடங்­கி­யது. இந்த சம­யத்­தில் வேறொரு மொழி­யில் நடித்­து­விட்டு வந்­தால் நன்­றாக இருக்­கும் என நினைத்­தேன். அத­னால்­தான் மலை­யா­ளத்­தி­லும், கன்­ன­டத்­தி­லும் நடித்­தேன்.

* சென்­னை­யில் தனி­யாக வசிக்­கி­றீர்­களே?

எனது குடும்­பத்­தி­னர் கொடுத்­தி­ருக்­கும் மிகப்­பெ­ரிய பரிசு, எனது சுதந்­தி­ரம்­தான். அவர்­கள் கொடுத்த சுதந்­தி­ரத்­தால் மட்­டுமே சென்­னை­யில் தனி­யாக இருக்க முடி­கி­றது. வாழ்க்­கை­யில் நடக்­கும் சந்­தோ­ஷம், துக்­கம் உள்­ளிட்ட விஷ­யங்­க­ளை­யும் நானே அனு­ப­விக்­கி­றேன்.

* உங்­க­ளது குடும்­பத்­தி­னர் கொடுத்த சுதந்­தி­ரத்தை, உங்­கள் குழந்­தைக்கு அளிப்­பீர்­களா?

கண்­டிப்­பாக அளிக்க மாட்­டேன். ஏனென்­றால், என் அப்பா - – அம்மா என்னை எப்­படி இவ்­வ­ளவு சுதந்­தி­ர­மாக வளர்த்­தார்­கள் எனத் தெரி­ய­வில்லை. நான் வள­ரும்­போது உள்ள உல­கம் தற்­போது இல்லை. சிறு­வ­ய­தில் வீட்­ட­ருகே இருக்­கும் கடைக்­குத் தனி­யாக மளி­கைப் பொருட்­கள் வாங்­கச் செல்­வேன். இந்­தி­யா­வுக்கு முத­லில் வரும்­போது சென்னை எனக்­குப் புதி­ய­து­தான். சிறு வய­தில் அண்ணா நகர் வீடு, பள்ளி இரண்­டை­யும் தவிர வேறெங்­கும் போன­தாக ஞாப­கமே இல்லை. ஆனால், தற்­போது பேப்­ப­ரில் வரும் செய்­தி­களை எல்­லாம் பார்த்­தால் பய­மாக உள்­ளது.

* ஒரு கட்­டத்­தில் நடிப்பே வேண்­டாம் என்று சொன்­னீர்­களே?

இந்­தி­யா­வுக்கு வந்­த­தி­லி­ருந்தே எனக்கு ஒரு நெருங்­கிய தோழன் இருந்­தான். அவன் எனது உடன்­பி­றவா தம்பி. திரை­யு­ல­கில் நுழைந்­த­போது எங்­கே­யா­வது சென்­றால், அவ­னோ­டு­தான் செல்­வேன். அவ­னோ­டு­தான் நிறைய இடங்­க­ளுக்­குச் சென்­றுள்­ளேன். ஒரு விபத்­தில் அவன் இறந்­து­விட்­டான். திரை­யு­ல­கில் நிறைய படங்­கள் நடிக்­கத் தொடங்­கிய போது, அவன் நம்­மு­டன் இல்­லையே என நான் எண்­ண­வில்லை.

ஒரு கட்­டத்­தில் படப்­பி­டிப்பு இல்­லாத நாட்­க­ளில் அவன் நம்­மு­டன் இல்­லையே என்று எண்­ணத் தொடங்­கி­னேன். நம்­மு­டனே இருந்த ஒரு­வரை இழப்­பது என்­பதை எளி­தா­கக் கடந்து சென்­று­விட முடி­யாது. குடும்­பத்­தி­ன­ரும் என்­னோடு இல்­லா­த­தால், நண்­ப­னின் இழப்­பால் திடீ­ரென்று வாழ்க்­கை­யில் ஒரு வெறுமை தெரிய தொடங்­கி­யது. சினி­மா­வில் தொடர்ச்­சி­யாக ஒரு பாடல், சில காட்­சி­க­ளில் நடிக்­கா­விட்­டால் மறந்து விடு­வார்­கள் என்ற எண்­ண­மெல்­லாம் இன்றி நண்­ப­னின் இழப்பு மட்­டுமே கண்­முன் இருந்­தது. அத­னால் அப்­படி எண்­ணி­னேன்.