மானூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பதிவு செய்த நாள்

04
பிப்ரவரி 2016
21:53

மானூர் வட்டாரம், கல்லூரில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி வரவேற்றார். 

வேளாண்மை துணை இயக்குனர் மேரி அமிர்தாபாய் தலைமை வகித்து, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் கனகா இலைச்சுருட்டுப்புழுத்தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் கற்பகராஜ், உர நிர்வாகம் குறித்து பேசினார்.

நெற்பயிரைத் தாக்கும் பூச்சி, நோய் நிர்வாகம் குறித்து வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், மஞ்சள் ஒட்டும் பொறி, எலிப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறிகள் உபயோகிக்கும் முறை குறித்து செயல்விளக்கப்பயிற்சி அளித்தார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் டெல்பின்மேரி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஹென்றிராஜன், உதவி தொழில்நுட்ப மேலாளர் இசக்கிமுத்துப்பாண்டியன் செய்திருந்தனர்.

இதுதவிர, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானூரில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கெங்காராஜ் தலைமை வகித்து, கறவை மாடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள், பால் உற்பத்தி அதிகரிக்க பசுந்தீவனப்புல் வளர்ப்பு குறித்து பேசினார். வேளாண்ணை துணை இயக்குனர் மேரி அமிர்தாபாய், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவர் செந்தூர் செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.