சவுதி அரேபியாவில் இந்தியச் தொழிலாளர் தவிப்பு : கத்தார் நாட்டு முதலாளிகள் வெளியேற்றப்பட்டதால் நேர்ந்த அவலம்

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2017 02:21

தோஹா,

சவுதி அரேபியா, கத்தாருடன் தூதரக உறவை துண்டித்ததை தொடர்ந்து, தன் நாட்டில் இருந்த கத்தார் நாட்டினரை வெளியேற்றியது. அதனால் அவர்களிடம் பணிபுரிந்த ஆசிய நாடுகளை சேர்ந்த பணியாளர்கள், சவுதியில் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
கத்தாருடன் சவுதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள்  தூதரக உறவை துண்டித்தன. இதன் காரணமாக தடை விதித்த நாடுகளில் இருந்த கத்தார் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் குடியிருந்த கத்தார் நாட்டினரிடம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபால் போன்ற நாடுகளை சேர்ந்த பலர் வேலைக்காரகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் வேலை பார்த்து வந்தனர். ஆனால் தங்கள் முதலாளிகள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் தற்போது வேலை இழந்துள்ளனர். சரியான உணவு, தங்கும் வசதிகள் இன்றி இவர்கள் அனைவரும் சவுதியில் தவித்து வருவதாக கத்தாரின் தேசிய மனித உரிமை கமிட்டி அறிவித்துள்ளது.]

மனித உரிமை கமிட்டியின் தலைவர் அலி பின் ஸ்மைக் அல்மாரி இது குறித்து கூறுகையில் ‘‘ அரபு நாடுகளின் முடிவால் பல ஆசிய நாட்டு குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த பணியாளர்கள் பெரும்பாலும் தங்கள் கத்தார் முதலாளிகளுடன் இரு நாட்டுக்கும் இடையே பயணம் மேற்கொள்வார்கள். பலர் விவசாய வேலைகளில் ஈடுபடுவார்கள்.’’

‘‘தற்போது இவர்களுக்கு கத்தாரில் நுழைய அனுமதியில்லாததால் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அடிப்படை வசதிகள் இன்றி அனைவரும் தவித்து வருகிறார்கள்’’ என அலி பின் தெரிவித்துள்ளார்.