4வது வெற்­றியை எதிர் நோக்­கும் இந்­தியா

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2017 10:07

லண்­டன்:

இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் உலக ஹாக்கி லீக் போட்­டித் தொட­ரின் அரை­யி­று­திப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதில் பி பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி, ஸ்காட்­லாந்து, கனடா, பாகிஸ்­தான் மற்­றும் நெதர்­லாந்து அணி­களை எதிர்த்து விளை­யாடி வரு­கி­றது. இதில் ஸ்காட்­லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்­கி­லும், கன­டாவை 3--0 என்ற கோல் கணக்­கி­லும், பாகிஸ்­தான் அணியை 7--1 என்ற கோல் கணக்­கி­லும் இந்­திய அணி தோற்­க­டித்­தது.

இந்­நி­லை­யில், நெதர்­லாந்து அணியை நாளை எதிர் கொள்­ள­வுள்­ளது. ஹாக்கி தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் நெதர்­லாந்து அணி  4வது இடத்­தில் உள்­ளது. நெதர்­லாந்து தான் விளை­யா­டிய முதல் போட்­டி­யில் பாகிஸ்­தானை 4--0 என்ற கோல் கணக்­கி­லும், ஸ்காட்­லாந்து அணியை 3--0 என்ற கோல் கணக்­கி­லும் தோற்­க­டித்­தது.

இந்­திய அணி­யின் ஆட்­டக்­கா­ரர்களான ராமன்­தீப்­சிங், ஆகாஷ்­தீப் சிங் மற்­றும் தல்­வீந்­தர் சிங், சர்­தார்­சிங், கேப்­டன் மன்­பி­ரீத்­சிங் ஆகி­யோர் மற்ற வீரர்­க­ளுக்கு பக்க பல­மாக உள்­ள­னர். இந்­தி­யா­வின் கோல் கீப்­பர்­க­ளாக உள்ள விகாஷ் தாஹியா, ஆகாஷ் சிக்தா ஆகி­யோர் புல் பார்­மில் உள்­ள­னர். இத­னால், இன்று நடை­பெ­றும் போட்­டி­யில் இந்­தியா வெற்­றியை தக்க வைக்­கும் நம்­பிக்­கை­யு­டன் களம் இறங்­கு­கி­றது.