திருநாகேஸ்வரத்தில் ஒரு தெய்வீக அழகு

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2017

புதிய ஆத்திசூடியில் “இளம்பிறை அணிந்து” என்று சிவபெருமானை மகாகவி பாரதியார் வருணித்துள்ளார். இதன் பொருள், சிவபெருமான் இளம்பிறையை தன் ஜடாமுடியில் ஏந்தியுள்ளார். இவர் அருகில் அமர்ந்திருப்பதால், பார்வதி தேவியின் முகத்தில் அந்நிலவு ஒளி விழும். இதை அபிராமி பட்டர் தான் இயற்றிய அபிராமி அந்தாதியிலுள்ள ஒரு பாடலில் கூறியுள்ளார்.


திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி திருக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை சந்திர ஒளியை தன் சிரசில் ஏந்தி பார்வதிதேவி காட்சியளிப்பாள். நாகநாத ஸ்வாமி சன்னதிக்கு அருகிலேயே தனி சன்னதியில் பார்வதிதேவி, பிறையணிவாணுதலாள் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளுகின்றாள். பிறை என்றால் நிலவு. வாணுதல் என்றால் ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் என்று பொருள். 

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதுபோன்று இந்த அம்மனின் சிலை சிறிய அளவில் இருந்தாலும், மிக சக்திவாய்ந்தவள்.

இந்த அம்பிகையின் பெயருக்கேட்ப ஒவ்வொரு வருடமும் ஒரு அற்புத நிகழ்வு இவள் கருவறையில் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்தன்று இந்த அம்பிகையின் பாதத்தில் நிலவொளி விழும்.

அம்மனின் பாதத்திலிருந்து சிரசு வரை நிலவொளி மெல்ல நகரும். அம்பிகையை நிலவொளியேந்திய நெற்றியுடன் காணும் வாய்ப்பு வருடத்தில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். அன்றைய தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் அன்னையை தரிசிக்க இத்திருக்கோவிலில் கூடுவர்.

கும்பகோணம் அருகிலுள்ளது திருநாகேஸ்வரம் என்னும் இந்த அழகிய ஊர். இங்கு உள்ள நாகநாத ஸ்வாமி திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயமாகும். இந்த ஆலயம் தேவாரப் பாடல் பெற்றது.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பேராலும் பாடல் பெற்ற தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்கு உரிய கோவிலாகும்.

முதலாம் பராந்தக சோழனின் மகனான கண்டராதித்த சோழனால் 950 - 956 ஆண்டுகளில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் கிபி.12 ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலின் உள்ளே இருக்கும் மண்டபத்தின் திருப்பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி மீது  கொண்ட அளவுகடந்த பக்தியால் தனது பிறந்த ஊரான சென்னை குன்றத்தூரில் ஒரு சிவாலயம் கட்டினார். அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்த இறைவன் பெயரும் நாகேஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சகுரோசத் தலங்கள்

பஞ்ச குரோசத் தலங்களில் திரு நாகேஸ்வரம் ஒன்று என தல புராணம் கூறுகிறது. குரோச தலம் என்றால் என்ன? பஞ்ச குரோச தலங்களில ஒன்றாக திருநாகேஸ்வரம் கருதப்பட காரணம் என்ன? இதற்கு விடைகளைப் பெற சற்று ஆராய்ச்சி அவசியம்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில் தல வரலாற்றின்படி பிரளய காலத்தின்போது உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் காக்க பிரம்ம தேவர் சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டார். சிவபெருமானின் ஆலோசனைப்படி தன் படைப்பாற்றலை அமுத கும்பத்தில் வைத்து அக்கும்பத்திற்கு பூஜை செய்து இமயமலை உச்சியில் பிரம்ம தேவர் பாதுகாப்பாக வைத்தார். அந்த பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சிவரை தண்ணீரின் அளவு உயர்ந்தது. இதனால் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த கும்பம் தண்ணீரில் மிதந்து தென்திசை நோக்கி சென்றது.

ஓர் இடத்தில் நீர் வடிந்ததால் தரை தட்டி கும்பம் நிலைபெற்று நின்றது. அந்த இடமே தற்போது உள்ள கும்பகோணம் ஆகும். கும்பத்திலிருந்த தேங்காய், மாவிலை, நூல் ஆகியவை ஒவ்வொரு இடங்களிலும் விழுந்தன. அந்த இடங்களில் சிவலிங்கங்கள் தோன்றின. சிவபெருமான் வேடன் உருவம் பெற்று வில்லினால் கும்பத்தை சிதைத்தார். இதிலிருந்த அமுதம் பல இடங்களில் சிதறின. சிதறிய அமுத்தை மணலோடு சேர்த்து ஒரு லிங்கத்தை உருவாக்கி சிவபெருமானே தன்னை பூஜை செய்தார். இந்த லிங்கமே தற்போது கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு வீற்றிருந்து அருள்பாளிக்கிறார்.

கும்பத்தில் இருந்த வில்வம் விழுந்த இடத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோவிலும், உறி விழுந்த இடம் சோமேஸ்வரர் கோவிலாகவும், நூல் விழுந்த இடத்தில் கவுதமேஸ்வரர் திருக்கோவிலும், தேங்காய் விழுந்த இடத்தில் அபுமுகேஸ்வரர் திருக்கோவிலும், வேடன் உருவத்தோடு சிவபெருமான் பாணம் எய்த இடத்தில் பாணபுரீஸ்வரர் திருக்கோவிலும், பூக்கள் விழுந்த இடத்தில் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோவிலும், கலசத்தின் உதிரி பாகங்கள் விழுந்த இடத்தில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும், அமிர்தம் விழுந்த இடத்தில் கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோவிலும், சந்தனம் விழுந்த இடத்தில் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலும், கும்பத்தின் நடுப்பகுதி விழுந்த இடத்தில் அமிர்தகலசநாதர் திருக்கோவிலும் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழாவில் இந்த அனைத்து தலங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு மகாமகம் குளக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். மகாமக குளத்தை சுற்றி அனைத்து கோவில்களின் இறைவனையும் ஒரு சேர பார்க்கும் இந்த காட்சியை காண கண்கோடி வேண்டும். மகாமக குளக்கரையில் ஒரு சேர அனைத்து மூர்த்திகளையும் தரிசிக்கும் பொழுது எல்லா திருத்தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி கரையின் பல்வேறு இடங்களில் பெருமாளுக்காக நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அதேபோல் கும்பகோணத்தை சுற்றி சிவபெருமானுக்காக பஞ்சகுரோசத் தலங்கள் அமைந்துள்ளன.

கும்பத்தில் இருந்த அமுதம் சிதறிய 5 முக்கிய இடங்களில் கோவில்கள் தோன்றின. அவற்றை பஞ்சகுரோசத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை,

1. திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி திருக்கோவில்

2. திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி திருக்கோவில்

3. தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

4. சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி திருக்கோவில்

5. கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணத்திற்கு கோவில் சுற்றுலா செல்பவர்கள் முறைப்படி இந்த 5 திருத்தலங்களுக்கும் ஒவ்வொரு நாள் சென்று, ஒரு பகல் அங்கு தங்கி தரிசித்து, இறுதியாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று தரிசித்தால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகக் குளக்கரையில் எழுந்தருளும் அனைத்து கோவில்களின் இறைவனையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாகநாத ஸ்வாமி

சுசீல முனிவரின் மகன் சுகர்மன். ஒரு சமயம் தக்கன் என்னும் நாகம் தீண்டியது. இதன் காரணமாக சுகர்மன் உயிரிழந்தான். 

தன் மகனை தீண்டிய நாகமான தக்கனுக்கு சுசீல முனிவர் நாக வடிவம் நீங்கி மானிடராக பிறக்க சாபம் வழங்கினார். சாபம் பெற்ற தக்கன் காசிப முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி பூஜை செய்தார். மனமிறங்கிய ஈசன் தக்கனுக்கு சாப நிவர்த்தி அளித்தார். தக்கன் உருவாக்கிய லிங்கமே இங்கு நாகநாத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவகிரகங்களில் ஒன்றான ராகு என்ற நாக கிரகமும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளது. இதேபோல் ஆதிசேஷன், கார்க்கோடகன், வாசுகி ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். நாகங்கள் வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்றும், இத்தல இறைவனுக்கு நாகநாத ஸ்வாமி என்ற பெயர் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

செண்பக வனமாக இருந்த இடத்தில் இத்திருக்கோவில் உருவான காரணத்தால், இத்தல இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்னும் திருநாமமும் இவருக்குண்டு. இத்தலத்தின் தல விருட்சம் செண்பகமரம்.

 அபிஷேகம் காணாத அம்பிகை கிரிகுஜாம்பாள்

பூலோகத்திற்கு வந்த பார்வதி தேவி திருநாகேஸ்வரத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக அலைமகளும், கலைமகளும் துணை நின்றனர்.

செண்பக வனமான இத்திருக்கோவிலில் அலைமகளான லட்சுமி தேவியும், கலைமகளான சரஸ்வதி தேவியும் இருபுறமும் நிற்க பார்வதி தேவி கிரிகுஜாம்பாள் என்னும் திருநாமத்தோடு தவம் புரியும் அற்புதக் காட்சியை இக்கோவிலில் காணலாம்.
வேறெங்கும் காணக்கிடைக்காத இந்த கோலத்தில் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியர்கள் சுதையால் ஆனவர்கள். ஆகையால் இவர்கள் மூவருக்கும் அபிஷேகம் கிடையாது.வருடத்திற்கு இரண்டு முறை புனுகு மட்டுமே சாத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அம்பாளின் முகத்தை மட்டும் பார்க்கும் வண்ணம் திரை போட்டுவிடுவார்கள்.

அபிஷேகத்தில் அதிசயம்

நவக்கிரக தலங்களில் ராகுவிற்கான தலமாக திருநாகேஸ்வரம் திருக்கோவில் விளங்குகிறது. இத்தலத்தில் மங்கள ராகுவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

தன் மனைவியர்களான நாகவல்லி, நாககன்னி ஆகியோர் தன் இருபுறமும் வீற்றிருக்க பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பொதுவாக ராகு மனித தலையுடன், பாம்பின் உடலைக் கொண்டு காட்சியளிப்பார். ஆனால், இத்தலத்தில் மட்டும் மனித தலை மற்றும் உடலுடன் காட்சி தருவது தனி சிறப்பு.

இந்த ராகுவின் சிலை தனிச்சிறப்பு வாய்ந்து. இந்த ராகுவின் சிலையில் அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக மாறும். சரியாக ராகு தலைக்கு மேலுள்ள நாகத்தில் பாலை ஊற்றினால் முகத்துக்கு வரும்போது நீல நிறத்தில் உருமாறும். பின்பு கீழே விழும்போது வெள்ளை நிறத்தில் மாறிவிடும். இந்த நிகழ்வை கண்டால் நம் உடம்பில் மெய்சிலிர்க்கும். இந்த அதிசயத்தை இன்றளவும் ராகுவிற்கு செய்யப்படும் அபிஷேகத்தின்போது காணலாம்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி, 5 அடி நீளமுள்ள நாகம் ஒன்று தனது சட்டையை உறித்து இந்த ராகு பகவானுக்கு மாலையாக அணிவித்தது. அந்த பாம்பு உறித்த சட்டையை இன்றளவும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பாதுகாத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருநாகேஸ்வரம் செல்லும் வழி

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 5.6 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது

திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயில்கள் மட்டும் நிற்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது.

கும்பகோணத்தில் இருந்து பேருந்து மூலம் இக்கோவிலுக்கு செல்லலாம்

அருகிலுள்ள வேறு தலங்கள்

ஒப்பிலியப்பன் திருக்கோவில்

திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி திருக்கோவில்

ஐய்யாவாடி பிரத்தியங்கரா தேவி திருக்கோவில்

திருபுவனம் சரபேஸ்வரர் திருக்கோவில்கட்டுரையாளர்: - தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Madhumitha 19-06-2017 01:50 AM
Superb bro.. keep it up.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Divya 19-06-2017 02:53 AM
Nice article. Keep it up Dinesh.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Parthiban 19-06-2017 05:03 AM
Well Done Dinesh. Nice Article

Reply Cancel


Your comment will be posted after the moderation


Sk babu 19-06-2017 05:22 PM
Good...keep going...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Harikrishnan 19-06-2017 06:06 PM
Arumai arumai.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Harish 19-06-2017 07:18 PM
Nice one. Best wishes for ur upcoming articles

Reply Cancel


Your comment will be posted after the moderation


Johnson 20-06-2017 12:21 AM
Keep on going my boy. Success with you always.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Pradeepa 20-06-2017 12:28 AM
Nice Article bro.... Great...

Reply Cancel


Your comment will be posted after the moderation


செல்வ ராஜ்குமார் 20-06-2017 12:32 AM
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேண்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிசன்னிதியில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அவருக்கு அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் ஸ்வாரஸ்யம் நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

Reply Cancel


Your comment will be posted after the moderation


செல்வ ராஜ்குமார் 20-06-2017 12:51 AM
சிறு வேண்டுகோள் கோயில் பூஜை நேரம் மற்றும் விசேஷ பூஜை காலங்கள் போன்றவை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் ....

Reply Cancel


Your comment will be posted after the moderation


kavin karthick 20-06-2017 03:48 AM
well done... keep it up

Reply Cancel


Your comment will be posted after the moderation


கவின் 20-06-2017 03:50 AM
அருமையான கட்டுரை சார்....

Reply Cancel


Your comment will be posted after the moderation


yuvan karthi 20-06-2017 03:51 AM
nice article... photos super...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 20-06-2017 09:47 PM
மிகவும் அருமை நண்பரே... மேலும் இது போன்ற சிறந்த பதிவுகளை தொடர்ந்து செய்யுங்கள்..

Reply Cancel


Your comment will be posted after the moderation


Nirmal 22-06-2017 04:22 AM
உனது கட்டுரை மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள்

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 23-06-2017 11:25 AM
Wowww, Wonderful article Bro, Lots Of Unknown Wonders came to Know By This Article,.sooo proud Of You..,

Reply Cancel


Your comment will be posted after the moderation