உலக கோப்பை தகுதிச் சுற்று தப்பியது இங்கிலாந்து

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017 09:04


உலககோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து நூலிழையில் தப்பி பிழைத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-2 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியுடன் டிரா செய்தது. ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் முதல் கோலை அடித்தார். அதற்கு பிறகு ஸ்காட்லாந்து அணியின் லீ கிரிப்த்ஸ் தனக்கு கிடைத்த 2 பிரி கிக் மூலம் அற்புதமாக 2 கோல் அடித்து ஸ்காட்லாந்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். அதற்கு பிறகு இரு அணிகளும் கோல் போட கடுமையாக முயற்சி செய்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி கேனி அற்புதமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி கேனி அடித்த கோலால் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து தப்பி பிழைத்தது.

இந்த போட்டியில் டிரா செய்தாலும் எப் பிரிவில் இங்கிலாந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடந்த போட்டியில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லாட்வியா அணியையும், ஜெர்மனி 7-0 என்ற கோல் கணக்கில் சான்மரினோ அணியையும், வடக்கு அயர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் அஜர்பைஜன் அணியையும்,செக். குடியரசு அணி 1-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியுடன் டிரா செய்தது.