விம்பிள்டனிலிருந்து விலகினார் ஷரபோவா

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017 09:03

ரஷ்யாவின் மரிய ஷரபோவா ஊக்க மருந்து சாப்பிட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட டென்னிஸ் கூட்டமைப்பு தடை விதித்து இருந்தது.

சமீபத்தில் இந்த தடை விலகியதையடுத்து ரோமில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு விளையாடும் போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 30 வயதாகும் மரிய ஷரபோவா விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  2004 ஆல் இங்கிலாந்து சாம்பியன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற ஷரபோவா 5 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலக தர வரிசையில் முதலிடத்தில் இருந்த ஷரபோவா ஜூலை மாதம் வரையிலும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.