பிரெஞ்ச் ஓபன்: போபண்ணா ஜோடி சாம்­பி­யன்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2017 09:13


பாரீஸ் : 

பிரான்ஸ் தலை­ந­கர் பாரீஸ் நக­ரில் நடை­பெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்­னிஸ் போட்­டி­யின் கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் ரோஹன் போபண்ணா, கன­டா­வின் கேப்­ரில்லா தப்­ரோஸ்­கி­யு­டன் இணைந்து விளை­யா­டி­னார். அரை­யி­று­திப் போட்­டி­யில் இந்த ஜோடி, இந்­தி­யா­வின் சானியா மிர்சா ஜோடியை தோற்­க­டித்­தது. நேற்று நடை­பெற்ற இறு­திப்­போட்­டி­யில் ரோஹன் போபண்ணா - கேப்­ரில்லா தப்­ரோஸ்கி ஜோடி, ஜெர்­மன் நாட்­டின் அன்னா லினா கிரோன்­பெல்ட் - கன­டா­வின் ராபர்ட் பரா ஜோடியை எதிர்த்து விளை­யா­டி­யது.

இந்­தப் போட்­டி­யில் ரோஹன் போபண்ணா ஜோடி முதல் செட்டை 2---6 என்ற புள்­ளி­கள் கணக்­கில் இழந்­தது. எனி­னும், சுதா­ரித்து விளை­யாடி 2-ம் செட்டை 6---2 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும், 3வது செட்டை 12-10 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும் கைப்­பற்றி, பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்­டை­யர் சாம்­பி­யன் பட்­டத்தை கைப்­பற்­றி­னர்.