சரிவிகித உணவே சரியான தீர்வு

பதிவு செய்த நாள் : 29 மே 2017

உணவே மருந்து என்ற கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள உடல் உழைப்பிற்கு தேவையான வகையில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை உண்டனர். ஆனால் இன்று மக்கள் பெரும்பாலும், சுவைக்கு முதலில் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். மக்களின் எழுத்தறிவு பெருகிய போதும், உணவு தொடர்பான அறிவு பரவவில்லை. இதை பயன்படுத்தி சந்தைச் சக்திகள் மக்கள் நாக்கில் நீர் ஊரச் செய்யும் உணவுகளைப் பிரலப்படுத்திவிட்டன. அதனால் இன்று நோய்களும் பெருகியுள்ளன.

இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வு, சரிவிகித உணவை அளிக்கும் நம் பாரம்பரிய உணவுமுறையை மீட்டெடுப்பதுதான். அதற்கு உதவும் வகையில் நமது பாரம்பரிய உணவு தானியங்களைப் பயன்படுத்தியாக வேண்டும்.

சரி, சரிவிகித உணவு என்றால் என்ன? 

பல்வேறு வகையான உணவுப்பொருட்களை உள்ளடக்கிய ஒரு உணவு நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவிற்கு வழங்கினால் அதுவே சரிவிகித உணவாகும்.

நம் உணவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பெரிய ஊட்டச்சத்துக்கள் (Macro Nutrients)

2.  சிறிய ஊட்டச்சத்துக்கள் (Micro Nutrients)

நம் உணவில் அதிக அளவில் உள்ள மாவுசத்து, புரதம் மற்றும் கொழுப்பு (Carbohydrate, Protein and Fat) ஆகியவையே பெரிய ஊட்டச்சத்துக்கள். இவை ஒவ்வொன்றும் நமது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் மூன்றும் நம் உடலுக்கு எரிபொருளாக சக்தி வழங்கிய போதிலும், மாவுசத்துதான் முக்கிய எரிபொருளாக பயன்படுகிறது. புரத சத்து நம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதிலும் உடலின் வெப்பநிலையை சீராக்குவதிலும் கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறிய ஊட்டச்சத்துகள் எனப்படுபவை உணவில் சிறிய அளவில் காணப்படும் 13 வகை வைட்டமின்கள் (Vitamins)  மற்றும் 12 வகை தாது உப்புகள் (Minerals) ஆகியவை ஆகும். இவை நம் உடலுக்கு குறைவான அளவே தேவைப்படும்.
ஆனால் நம் உடலின் இயக்கம், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய பணிகளுக்கு சிறிய ஊட்டச்சத்துகள் மிக அவசியம். இவை ஒவ்வொன்றும் தனியாகவோ அல்லது ஒன்றோடொன்று இணைந்தோ, உடலில் பல்வேறு பணிகளைச் செய்கின்றன.

எனவே, பெரிய ஊட்டச்சத்துகள் மற்றும் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகியவை போதிய அளவு நம் உணவு மூலமாக நமக்கு கிடைத்தால் அதுவே சரிவிகித உணவாகும்.

இயற்கையாகவே நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் அவசியம். ஏனென்றால், இருவகையான ஊட்டச்சத்துக்களும் தங்கள் செயல்பாடுகளுக்கு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.

உதாரணமாக பெரிய ஊட்டச்சத்துகள், நம் உடலுக்கு தேவையான எரிபொருளாகச் செயல்பட வைட்டமின்கள் மற்றும் தாதுபொருள்களின் உதவி அவசியம். உதாரணமாக மாவுசத்து எரிபொருளாக மாற வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அவசியம்.

அதேபோல் சிறிய ஊட்டச்சத்துகள் ஒவ்வொன்றும் நம் உடலில்  செயல்பட பெரிய ஊட்டச்சத்துகளின் உதவி தேவை. உதாரணமாக, வைட்டமின்கள் A, D, E, K  ஆகியவை நம் உடலில் சேமிக்கப்படவும், செயல்படவும் கொழுப்பு மிக அவசியம்.

எனவே நாம் எந்த ஊட்டச்சத்துகளையும் முற்றிலுமாக தவிர்க்க முடியாது.

பெரும்பாலானோர் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசையில், மாவு சத்து, கொழுப்பு சத்து ஆகியவற்றை தவிர்ப்பதை பார்க்கிறோம். பல பெற்றோர்களே அறியாமை காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு தவறான உணவு முறையைப் பழக்கப்படுத்துகிறார்கள்.

ஆனால் இது போன்ற செயல்பாடுகள் கடும் பின்விளைவை ஏற்படுத்தும். உடல்நலத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும். எனவே மக்கள் இத்தகைய தவறான போக்கை கைவிடுவதே சிறந்த வழி.

இந்த உண்மையை மக்களுக்கு எடுத்து கூறும் மக்கள் நல அமைப்புகள் இன்று மிக குறைவு. குறுகியகாலத் தீர்வுகளை வழங்குவதாகக் கூறி, வெளிநாட்டு சந்தையை விரிவுப்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சுயநல அமைப்புகளே இன்று அதிகம்.

ஊட்டச்சத்துகளின் தேவைகள்

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துகளின் தேவை மாறுப்படும்.

எனவே ஒவ்வொருவரும் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், தங்கள் உணவுமுறையை அமைத்துகொள்ள வேண்டும். அதை செயல்படுத்த அனைவருக்கும் தங்கள் உணவு தேவைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம். இதற்கு நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற வழிமுறைகளை நாம் பின்பற்றுவதே சிறந்த வழி.

பாரம்பரியமே சிறந்த வழி

ஒரு நாட்டின் உணவுமுறை என்பது அந்த நாட்டின் பருவநிலை, விளையும் பொருள்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும். அவ்வாறு இயற்கையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் உணவு முறையே பாரம்பரிய உணவு முறையாகும்.


அந்த வகையில் தேவையான தானியங்களுடன், பருப்பு மற்றும் பயிறு வகைகளைச் சேர்த்து, அதிக காய்கறி மற்றும் பழங்களுடன் கூடிய நம் இந்திய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

அதிலும் நம் உடல்நலன் காக்க உலகம் போற்றும் நம் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகள் மிக சிறந்தவை.  

காலை உணவிற்கு இட்லி, பொங்கல், வடை, தோசை அதற்குண்டான சட்னிகள். மதியம் மற்றும் இரவு உணவிற்கு சாதம், சாம்பார், ரசம்,  தயிர், கூட்டு, பொறியல், என நாம் உண்ணக்கூடிய விதவிதமான உணவில் நமக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைத்துவிடும்.

உதாரணமாக:

உணவுப் பொருள்       –  தயாரிப்பு பொருள்         – கிடைக்கும் சத்து

இட்லி                                   அரிசி, பருப்பு                           –  மாவுசத்து, புரதம்

சாம்பார்                               பருப்பு, காய்கறிகள்               -  புரதம், வைட்டமின்கள்,

                                                                                                           தாது உப்புகள், நார்சத்து, சிறிது கொழுப்பு

தேங்காய் சட்னி               தேங்காய், பருப்பு                   -  கொழுப்பு, புரதம்

இந்த ஒரு சாதாரண காலை சிற்றுண்டியே அனைத்து ஊட்டச்சத்துகளையும்  நமக்கு அளிக்கிறது.

மேலும் நம் பாரம்பரிய உணவுமுறையுடன் நம் பாரம்பரிய உணவு தானியங்களையும் பயன்படுத்த வேண்டும். சிறுதானியங்களான சாமை, வரகு, திணை, கம்பு, சோளம், குதிரைவாலி ஆகியவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவற்றில் அரிசி கோதுமையைவிட ஊட்டச்சத்துகள் அதிகம்.

அதேபோல் அந்தந்த பருவ காலத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். இதுவே சிறந்த சரிவிகித உணவிற்கான ஆதாரம்.

நம் அன்றாட வாழ்வில், சரியான உணவு வகைகளை நம் தேவைகேற்ப நேரம் தவறாமல் சாப்பிட்டு, அதற்கேற்ற உடலுழைப்புடன் வாழ்ந்தால் அதுவே நம் ஆரோக்கிய வாழ்விற்கான எளிய வழிமுறையாகும்.கட்டுரையாளர்: - நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
pratheep 30-05-2017 07:39 PM
நன்று


kanchanamala 30-05-2017 08:32 PM
very essential article for today food trend which exploits our next generations health thro which our nation strength will be quistioned. article explains all in a simple way.expecting more like this.


Reply Cancel


Your comment will be posted after the moderation


Jayaganapathy S 30-05-2017 09:32 PM
இன்றைய காலத்துக்கு மக்களுக்கும் தேவையான கட்டுரை.நவீன காலத்தில் ஆரோக்கிய வாழ்விற்கான எளிய வழிமுறை அளித்த கட்டுரையாளருக்கு என் வாழ்த்து மற்றும் பாராட்டுகள்

Reply Cancel


Your comment will be posted after the moderation


Thenmozhi 30-05-2017 11:08 PM
Nice... Long way to go...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 30-05-2017 11:12 PM
மிக அருமையான கட்டுரை ஊட்டச்சத்து(Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்க முடியும் என்பதை தெலிவு படுத்தியுள்ளீர்கள். இது போன்ற பல கட்டுரைகளை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி....

Reply Cancel


Your comment will be posted after the moderation


kanchanamala 30-05-2017 11:18 PM
very essential article for today food trend which exploits our next generations health thro which our nation strength will be quistioned. article explains all in a simple way.expecting more like this.

Reply Cancel


Your comment will be posted after the moderation


ஜெயகணபதி 30-05-2017 11:38 PM
பாரம்பரிய உணவு முறை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.ஒவ்ஒவொரு நாட்டிற்கு என உணவு முறை உள்ளது.அதை பின்பற்றினால் எந்த நோயும் ஏற்படாது.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Dinesh guhan 31-05-2017 02:35 AM
அருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டிய தொகுப்பு!!!

Reply Cancel


Your comment will be posted after the moderation


Yasmin Abubakkar 31-05-2017 07:36 AM
கட்டுரை சிறப்பாக உள்ளது, சொல்ல வேண்டிய கருத்துகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். மேன்மேலும் சிறந்த கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.

Reply Cancel


Your comment will be posted after the moderation


ஹிந்து சங்க செய்தி 31-05-2017 11:46 PM
ஆரோக்கியமாக வாழ நம் பாரம்பரிய ஹிந்து உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அந்நிய உணவு வகை மேல் மோகம் கொண்டால் ஆபத்து. அந்தந்த பருவ காலத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். இதுவே சிறந்த சரிவிகித உணவிற்கான ஆதாரம். என்று கூறிய கட்டுரையாளருக்கு பாராட்டுகள்

Reply Cancel


Your comment will be posted after the moderation


R.Padmalatha 02-06-2017 02:07 AM
சரி விகித உணவே சாலச்சிறந்தது .எக்காலத்துக்கும் ஏற்றது அவரவர் பாரம்பரிய உணவு வகைகளே என்பதை தற்கால இளைஞர்களும் உணரும் படி எழுதியுள்ள கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை விரைவில் எதிர் பார்க்கலாமா?

Reply Cancel


Your comment will be posted after the moderation


Mahalakshmi 02-06-2017 02:48 AM
Very nice article regarding, importance of balanced nutrition in our traditional food.

Reply Cancel


Your comment will be posted after the moderation


T.Ramani 04-01-2019 06:52 PM
Very nice

Reply Cancel


Your comment will be posted after the moderation


Rani 22-08-2019 06:09 PM
I'm very happy for this kinda article..It's very important to everyone now.Because, nowadays people are not following nutritional according to balance their diet.Its very useful and helpful tips to teccare of our health .

Reply Cancel


Your comment will be posted after the moderation