நேரு நினைவு நாள்: பிரணாப், சோனியா பிரதமர் மோடி அஞ்சலி

பதிவு செய்த நாள் : 27 மே 2017 19:05

புதுடில்லி:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மறைந்தார். இன்று அவரது 53வது நினைவுதினம் ஆகும்.


இந்நாளையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர்  ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சாந்தி வனத்தில் உள்ள நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


நேரு நினைவுநாளில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் “பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு அஞ்சலிகள்” என்று பதிவிட்டுள்ளார்.