புஜங்காசனம்!

பதிவு செய்த நாள் : 26 மே 2017

'புஜங்­கம்' என்­றால் பாம்பு. இந்த ஆச­னத்­தின் கடைசி நிலை­யில், பாம்பு படம் எடுப்­பது போல் நமது உடல் இருப்­ப­தால், இந்த பெயர் வந்­தது.

செய்­முறை:

ஆரம்ப நிலை:

• ஒரு பாயில் குப்­புற படுத்­துக்­கொள்­ள­வும்.

• கால்­களை சேர்த்து வைத்­தி­ருக்­க­வும்.

• கைகளை தலைக்கு மேலே உயர்த்தி தரை­யில் வைத்­துக் கொள்­ள­வும்.

• தாடையை தரை­யில் வைத்­தி­ருக்­க­வும்.

1. முத­லில் உள்­ளங்­கை­களை பக்­க­வாட்­டில் மார்­புக்கு பக்­கத்­தில் வைத்­துக் கொள்­ள­வும்.

2. பிறகு மெது­வாக கைகளை ஊன்றி வயிற்­றி­லி­ருந்து மேலெ­ழும்பி நேரா­கப் பார்க்­க­வும்.

3. மூச்சை இழுத்து விட­வும்.

4. ஒரு நிமி­டம் வரை இந்­நி­லை­யில் இருக்­க­வும்.

5. பிறகு மெது­வாக கீழே வந்து தாடையை தரை­யில் வைத்­துக் கொண்டு, கைகளை விடு­வித்து, தலைக்கு மேலே ஆரம்ப நிலைக்கு கொண்டு சென்று, பிறகு மக­ரா­ச­னத்­தில் ஓய்வு பெற­வும்.

பயன்­கள் :

1. முது­குக்கு நல்ல நெகிழ்­வுத் தன்மை (flexibility) கிடைக்­கி­றது.

2. சோம்­பே­றித்­த­னத்தை போக்கி, சுறு­சு­றுப்­பாக இருக்க உத­வு­கி­றது.

3. அனிச்­சை­யாக (Reflex) செயல்­ப­டும் திறன் அதி­க­ரிக்­கி­றது.

4. கண்­பார்வை திறன் அதி­க­ரிக்­கி­றது.

5. மூச்சு சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள் வரா­மல் பார்த்­துக்­கொள்ள உத­வு­கி­றது.

- ஆர். தங்­க­லஷ்மி